For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோலகலமான “தக்காளி” திருவிழா - ஸ்பெயினில் நடைபெற்ற சிகப்புக் கொண்டாட்டம்!

Google Oneindia Tamil News

பியுனோல்: ஸ்பெயின் நாட்டின் பியுனோல் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவின் தக்காளி சண்டை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.

ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 22,000 பேர் பங்கு கொண்டனர்.

இவர்களில் பலர் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்தனர்.

125 டன் தக்காளிகள்:

125 டன் தக்காளிகள்:

இவர்கள் ஒருவர் மீது ஒருவர் வீசி எறிவதற்காக 125 டன் பழுத்த தக்காளிகள் இன்று அங்கு வரவழைக்கப்பட்டிருந்தன.

சிவந்து போன தெருக்கள்:

சிவந்து போன தெருக்கள்:

சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த ஆதரவைப் பெற்ற இந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்ட தக்காளிகளால் தெரு முழுவதும் தக்காளிக் கூழினால் சிவந்து காணப்பட்டது.

பத்து யூரோ கட்டணம்:

பத்து யூரோ கட்டணம்:

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற வெளிநாட்டுப் பயணிகளிடம் இரண்டாவது ஆண்டாக தலைக்கு பத்து யூரோக்கள் வசூலிக்கப்பட்டது. அதாவதி இந்திய மதிப்பில் சுமார் 800 ரூபாய் ஆகும்.

முன்னதாக முடிந்த முன்பதிவு:

முன்னதாக முடிந்த முன்பதிவு:

பல வாரங்களுக்கு முன்பாகவே இந்த முன்பதிவு நிறைவு பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடனை அடைக்க நிகழ்ச்சி:

கடனை அடைக்க நிகழ்ச்சி:

இந்த நகரத்தைச் சேர்ந்த 20,000 மக்கள் தங்களின் நகர நிர்வாகத்துக்கு இருந்த 5.5 மில்லியன் யூரோ கடனை அடைப்பதற்காக சென்ற ஆண்டு இத்தகைய ஏற்பாட்டைத் தொடங்கினர்.

வீசி எறிந்து சண்டை:

வீசி எறிந்து சண்டை:

கடந்த 1945ஆம் ஆண்டில் தக்காளி விளைந்திருந்த பகுதிகளில் வாழ்ந்துவந்த உள்ளூர்க் குழந்தைகள் உணவுக்காக தக்காளியை வீசியெறிந்து சண்டையிட்டுக் கொண்டதைக் கண்டே இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.

English summary
You say tomato. In Spain, they say tomate. And in Bunol, Spain, it's time for the annual La Tomatina festival, the epic Iberian food fight that draws thousands of adventure-seekers and saucy Spaniards alike to partake in an hour of pulp-pelting, tomato-laced fun.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X