For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பில்கேட்சை உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவராக்கிய மைக்கேல் லார்சன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்சை உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக மாற்றியதன் பின்னணியில் மைக்கேல் லார்சன் என்ற ஊழியரின் பங்கி இன்றியமையாதது.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக உள்ளார் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ். ஆண்டுதோறும் இவரது சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டேச் செல்கிறது.

இந்நிலையில், பில்கேட்சின் இந்த அபரிமிதமான முன்னேற்றத்தில் மைக்கேல் லார்சன் முக்கியப் பங்கு வகிப்பதாக ஊடகங்கள் பாராட்டி வருகின்றன.

20 வருடங்களுக்கு முன்பு...

20 வருடங்களுக்கு முன்பு...

கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் பில்கேட்சிடன் பணிக்குச் சேர்ந்தார் மைக்கேல் லார்சன். அப்போது பில்கேட்சின் சொத்து மதிப்பு வெறும் 5 பில்லியன் அமெரிக்க டாலர்தான்.

முதலீட்டு நிறுவனம்...

முதலீட்டு நிறுவனம்...

சுறுசுறுப்பும், கணிப்பு திறனும் இயற்கையாகவே கொண்ட லார்சன், தனது கடும் உழைப்பால் பில்கேட்ஸின் சொந்த முதலீட்டு நிறுவனமான கேஸ்கேட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தின் வருமானத்தை பன்மடங்கு உயர்த்தினார்.

லார்சனின் திறமை...

லார்சனின் திறமை...

கடும் நெருக்கடி சமயமொன்றில் பில்கேட்ஸ் தனது மைக்ரோசாப்டை மட்டுமே நம்பியிருந்தார். ஆனால், லார்சனின் திறமையால் முதலீட்டு நிறுவனத்தின் வருமானம் அதிகரித்தது.

மற்ற முதலீடுகள்...

மற்ற முதலீடுகள்...

அந்த வருமானத்தை லார்சன் புத்திசாலித்தனமாக டெக்னாலஜியில் மட்டுமே முதலீடு செய்து வந்த முறையை மாற்றி ரியல் எஸ்டேட், கனடியன் ரெயில்வே கம்பெனி, ஆட்டோ நேஷன், ரிபப்ளிக் சர்வீஸஸ் போன்றவற்றில் முதலீடு செய்தார்.

அறக்கட்டளை...

அறக்கட்டளை...

இன்று பில்கேட்சின் சொத்து மதிப்பு 81.6 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. லார்சனின் திறமையால் கிடைத்த பணமே இன்று பில்கேட்ஸின் அறக்கட்டளையாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Secretive Money Manager Michael Larson Helped Microsoft Co-Founder's Fortune Balloon to $82 Billion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X