For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இவர்தான் உலகிலேயே செம 'ஸ்டைலிஷான' தடகள வீராங்கனை!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மாகி வெஸ்ஸி.. அமெரிக்க தடகள வீராங்கனை... 32 வயதாகும் இவர்தான் உலகிலேயே மிகவும் ஸ்டைல் லுக்குடன் கூடிய தடகள வீராங்கனை என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

இத்தனைக்கும் இவர் ஒருமுறை கூட ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றதில்லை. நடுத்தர ஓட்டப் பந்தய வீராங்கனையான இவர் இரண்டு முறை அமெரிக்கா சார்பில் உலக தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இவர் பிரபலமானவரும் கூட இல்லை. ஆனாலும் இவருக்கு உலகிலேயே மிகவும் ஸ்டைலான வீராங்கனை என்ற பெயர் கிடைத்துள்ளது.

டிரஸ் ராணி

டிரஸ் ராணி

இதற்கு இவர் போட்டிகளின் போது அணியும் உடைதான் முக்கியக் காரணம். வழக்கமான வீராங்கனைகள் போல டிராக் சூட் போடுவதில்லை வெஸ்ஸை. மாறக பேஷன் அழகுடன் கூடிய அட்டகாசமான காஸ்ட்யூமில் வந்து கலக்குகிறார்.

கலிபோர்னியாவிலிருந்து

கலிபோர்னியாவிலிருந்து

கலிபோர்னியாவின் சோக்யூல் என்ற நகரைச் சேர்ந்தவர் வெஸ்ஸி. 800 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று ஓடி வருபவர்.

பேஷன் வீராங்கனை

பேஷன் வீராங்கனை

இவர் கலந்து கொள்ளும் போட்டிகளில் எல்லாம் இவரது ஓட்டத்தை விட இவர் அணிந்திருக்கும் டிராக் சூட்தான் அதிகம் பார்க்கப்படுகிறது, பேசப்படுகிறது.

வழக்கமான உடைகளை வெறுப்பவர்

வழக்கமான உடைகளை வெறுப்பவர்

வழக்கமாக வீராங்கனைகள் அணியும் உடைகளைப் போல இவர் அணிவதே இல்லை. மாறாக வித்தியாசமான டிசைனுடன் கூடிய உடைகளைத்தான் பார்த்துப் பார்த்துப் போட்டு அசத்துகிறார்.

லாஸ் ஏஞ்செலஸிலிருந்து டிரஸ்

லாஸ் ஏஞ்செலஸிலிருந்து டிரஸ்

இவருக்கான போட்டி உடைகளை டிசைன் செய்வதற்காகவே லாஸ் ஏஞ்சலெஸைச் சேர்ந்த மெர்லின் காஸ்டெல் என்பவரை நியமித்துள்ளார் வெஸ்ஸி.

உடையால் ஈர்ப்பேன்

உடையால் ஈர்ப்பேன்

தனது டிரஸ்ஸிங் சென்ஸ் குறித்து வெஸ்ஸி கூறுகையில், நான் எனது உடையின் மூலமாக இந்தப் போட்டிகளைப் பார்க்காதவர்களையும் கூட ஈர்க்க விரும்புகிறேன். இதன் மூலம் தடகளப் போட்டிகளுக்கும் ரசிகர்கள் கூடுவார்கள் என்பது எனது எண்ணம்.

போல்ட் அன்ட் பியூட்டிபுல்

போல்ட் அன்ட் பியூட்டிபுல்

போல்டாக இருக்க வேண்டும். ரிஸ்க் எடுக்க வேண்டும். இவை இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள். இதற்காக நான் யாருக்கும் பயப்படவே மாட்டேன் என்கிறார் வெஸ்ஸி.

ஜாய்னர் வழியில்

ஜாய்னர் வழியில்

80களில் அமெரிக்காவைக் கலக்கிய தடகள வீராங்கனை புளோரன்ஸ் கிரிபித் ஜாய்னரும் இப்படித்தான் வித்தியாசமான முறையில் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஆவார். அவரது வழியில் இப்போது வெஸ்ஸி கலக்குகிறார்.

நீளமான நகங்களுடன் ஜாய்னர்

நீளமான நகங்களுடன் ஜாய்னர்

ஜாய்னர் நீளமான நகங்களுடன் வித்தியாசமாக காணப்படுவார். அந்த நகங்களில் விதம் விதமான படங்களையும் வரைந்திருப்பார்.

நைட் கிளப் ராணி

நைட் கிளப் ராணி

மேலும் நைட் கிளப்களில் கலந்து கொண்டு இவர் போட்ட ஆட்டமும், பாட்டமும் யாருக்கும் மறந்திருக்காது. 1988ம் ஆண்டு வரலாற்றிலேயே அதி வேகமான பெண்மணி என்ற பட்டத்தையும் வென்றவர் ஜாய்னர்.

ஆணாதிக்கத்தை முறியடிப்பாரா வெஸ்ஸி

ஆணாதிக்கத்தை முறியடிப்பாரா வெஸ்ஸி

தடகளமானது ஆண்களின் ஆதிக்கம் நிறைந்தது. இங்கு பெண்களின் கால்களும், கைகளும் ஓங்குவது என்பது மிக மிக அரிதானது. ஜாய்னருக்குப் பின்னர் யாரும் அந்த சாதனையைப் புரிந்ததில்லை. ஆனால் பேஷன் பிரியையான வெஸ்ஸி அதை முறியடித்து தனி இடம் பெறுவார் என்று பலரும் கூறுகிறார்கள்.

வீனஸ் - செரீனா வில்லியம்ஸ் போல

வீனஸ் - செரீனா வில்லியம்ஸ் போல

பிற துறைகளை எடுத்துக் கொண்டால், கவர்ச்சி மற்றும் பேஷன் உடைகள் ஆகிய காரணங்களுக்காக செரீனா வில்லியம்ஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் டென்னிஸில். மரியா ஷரபோவாவும் இந்த களத்தில் இன்னும் இருக்கிறார். ஆனால் தடகளத்தில் அப்படி யாரும் இல்லை. அந்தக் குறையை வெஸ்ஸி தீர்ப்பார் என்று கணிக்கப்படுகிறது.

English summary
Though she has twice represented the U.S. at the World Championships, middle-distance runner Maggie Vessey hasn’t yet made it to the Olympics, nor become a household name. But the 32-year-old 800-meter champ from Soquel, California, has a very real shot at becoming a fashion-world favorite.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X