For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலேசிய விமானத்தில் பலியானோரின் உடல்கள் உக்ரைன் நகருக்கு வந்து சேர்ந்தன!

Google Oneindia Tamil News

கார்கிவ், உக்ரைன்: மலேசிய விமான தாக்குதல் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் அடங்கிய ரயில், உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கார்கிவ் என்ற நகருக்கு வந்து சேர்ந்துள்ளது.

மலேசிய விமானம் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு புரட்சிப் படையினர் வசம் உள்ள பகுதியில் ஏவுகணையால் சுட்டு வீ்ழ்த்தப்பட்டது. விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை ரஷ்ய ஆதரவுப் படையினர் மீட்டு ரயில் மூலம் உக்ரை் அரசுத் தரப்பு நகருக்கு அனுப்பி வைத்தனர். இந்த ரயில் தற்போது கார்கிவ் நகருக்கு வந்துள்ளது.

Train with remains of MH17 crash victims arrives in Ukraine's Kharkiv

கார்கிவ் நகரில் உள்ள ஆயுதக் கிட்டங்கி தொழிற்சாலைக்குள் ரயில் வந்து சேர்ந்துள்ளது. இங்கிருந்து உடல்கள் இறக்கப்பட்டு விமானம் மூலம் நெதர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதற்காக நெதர்லாந்து குழு ஒன்று கார்கிவ் வந்துள்ளது. மலேசிய விமான விபத்தில் 295 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நெதர்லாந்து நாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே விமானத்தின் கருப்புப் பெட்டியை மலேசிய அதிகாரிகளிடம் புரட்சிப் படையினர் ஏற்கனவே ஒப்படைத்து விட்டனர்.

English summary
A train carrying the remains of victims of a Malaysian plane downed over rebel-held territory in eastern Ukraine arrived in the government-controlled city of Kharkiv, a Reuters witness said on Tuesday. The train, which includes five grey refrigerated carriages, slowly rolled into the grounds of an arms industry plant in Kharkiv where the remains are due to be unloaded and then flown to the Netherlands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X