For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துருக்கி எல்லையில் குவியும் சிரிய அகதிகள் வன்முறையால் எல்லை மூடப்பட்டது!

By Mathi
Google Oneindia Tamil News

Turkey clamps down on Syria border after Kurdish unrest
இஸ்தான்புல்: துருக்கி எல்லையில் குவிந்து வரும் சிரிய அகதிகள் வன்முறையில் ஈடுபட்டதால் எல்லை மூடப்பட்டுவிட்டது.

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். இந்த தீவிரவாதிகள் சிரியாவின் வடக்கு பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தி, முன்னேறி வருகின்றனர்.

அவர்கள் துருக்கி எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஏராளமான கிராமங்களை கைப்பற்றி உள்ளனர். எக்சிம் இன் இட்லிப், சரகுப் நகரங்களை தீவிரவாதிகள் சுற்றி வளைத்தனர். இந்த பகுதியில் சிரியா அரசுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 16 குழந்ததைகள், 11 பெண்கள் உள்பட 40 பேர் பலியானதாக இங்கிலாந்து மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.

துருக்கி எல்லைப்பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கை ஓங்கி வருகிறது. இதனால் கடந்த 3 நாட்களில் உயிருக்கு பயந்து, அங்கு வசித்து வந்த 1,லட்சத்து 30 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு, குடும்பம், குடும்பமாக துருக்கியில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

நேற்று சில குர்து மக்கள் கும்பலாக துருக்கி எல்லைக்குள் நுழைய முயன்றனர் அவர்களை துருக்கிய படைகள் தடுத்து நிறுத்தின இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் கொபானி நகரில் இருந்து வந்த அகதிகள் ஆவார்கள்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி உருவானதில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் அதிகமான சிரியாவை சேர்ந்தவர்கள் அகதிகளாக துருக்கிக்கு வந்து உள்ளனர்.

தொடர்ந்து அதிகமான அகதிகள் வருவதால் துருக்கியில் அகதிகள் தங்கவைக்கபட்டு உள்ள பள்ளிகூடங்களில் நெரிசல் ஏற்பட்டு உள்ளது .இதை சமாளிக்க துருக்கி பாதுகாப்பு வீரர்கள் அகதிகள் வருகையை கட்டுப்படுத்த முயன்றனர் அதனால் அங்கு போராட்டம் வெடித்தது. போராட்டகாரர்கள் துருக்கி ராணுவ வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர். போராட்டகாரர்கள் மீது கன்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.போராட்டத்தை தொடரந்து துருக்கி எல்லை மூடபட்டு உள்ளது.

English summary
Turkey has begun to close some of its border crossings with Syria after about 130,000 Kurdish refugees entered the country over the weekend.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X