For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐரோப்பிய நாடுகளை ஒரு மாதத்திற்குள் தீவிரவாதிகள் தாக்கும் அபாயம்- சவுதி மன்னர் எச்சரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்துக்கு திரும்பும் போராளிகளை தடுக்க விமான பயணிகளின் பட்டியலை சரிபார்க்கும் அதிகாரம் அந்நாட்டு உளவுத்துறைக்கு வழங்கப்பட உள்ளது.

மேற்கத்திய நாடுகளை ஒரு மாதத்திற்குள் தீவிரவாத அமைப்புகள் தாக்கும் என்று சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

தீவிரவாதிகள்

தீவிரவாதிகள்

கவனிக்காமல்விட்டால் ஒரு மாதத்திற்குள் தீவிரவாதம் ஐரோப்பாவை அடையும். அடுத்த மாதத்தில் அமெரிக்காவை அடையும். தீவிரவாத்ததை வேகம், படை ஆகியவற்றை வைத்து போராட வேண்டும் என்று சவுதி மன்னர் தெரிவித்தார்.

போராளிகள்

போராளிகள்

இங்கிலாந்துக்குள் போராளிகள் நுழைவதை தடுக்க விமான பயணிகளின் பட்டியலை சரிபார்க்கும் அதிகாரம் அந்நாட்டு உளவுத்துறைக்கு வழங்கப்பட உள்ளது.

விமானம்

விமானம்

விமானத்தில் வரும் யார் மீதாவது சந்தேகம் இருந்தால் அந்த விமானம் இங்கிலாந்தில் தரையிறங்க அனுமதிக்கப்படாது.

குடிமகன்கள்

குடிமகன்கள்

இஸ்லாமிய போராளிகளுடன் சேர்ந்து போராட சென்ற இங்கிலாந்து குடிமகன்கள் நாடு திரும்ப தற்காலிக தடை விதிக்கப்பட உள்ளது.

சிரியா

சிரியா

இங்கிலாந்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் பேர் சிரியா சென்று அங்குள்ள தீவிரவாதிகளுடன் சேர்ந்து போராடியுள்ளனர். அதில் 250 பேர் நாடு திரும்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது. நாடு திரும்பியவர்களை வைத்து கூட இங்கிலாந்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

English summary
England has decided to stop the returning jihadis from entering the nation by giving power to intelligence agency to check the airline flight lists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X