For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரியாவில் ரசாயன ஆயுத ஒழிப்புக்கான ஐ.நா. தூதர் நியமனம்!

By Mathi
Google Oneindia Tamil News

நியூயார்க்: சிரியாவில் ரசாயன ஆயுத அழிப்புப் பணிக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதராக சிகிரீட் காஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சிகிரீட் பெயர் பரிசீலிக்கப்பட்டது. சிரியாவில் ரசாயன ஆயுத அழிப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ரசாயன ஆயுத கண்காணிப்பு கூட்டுக் குழுவின் தலைவராக காஹ் செயல்படுவதற்கு பாதுகாப்புச் சபை ஒப்புதல் வழங்கியது.

இதற்கான கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றாலும், அதிகாரபூர்வ அறிவிப்பை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் நேற்று வெளியிட்டார்.

அண்மையில்தான் சிரியா பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் ரசாயன ஆயுத கண்காணிப்பு கூட்டுக் குழுவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
The head of the United Nations named Sigrid Kaag to lead the UN's joint mission with the chemical weapons watchdog tasked with eliminating Syria's arsenal, diplomats said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X