For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பத்திரிகையாளர் தலையை துண்டித்தது எங்கள் நாட்டின் மீதான தீவிரவாதத் தாக்குதல்: அமெரிக்கா

By Mathi
Google Oneindia Tamil News

நியூயார்க்: பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலியின் படுகொலை தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் குறித்த செய்திகளை சேகரிக்க சென்ற அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலியின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்த காட்சிகளோடு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை தகவல் எனக் குறிப்பிடப்பட்ட வீடியோவை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டது.

United States brands journalist James Foley beheading as 'terrorist attack'

ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட வீடியோ பதிவு குறித்து அமெரிக்க அரசு தரப்பு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த படுகொலையை அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாதத் தாக்குதலாக அறிவிப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் கூறும்போது, போலி படுகொலை அமெரிக்காவின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

அந்த அமைப்பு தங்களது கோரிக்கைகளை நிரைவேற்ற பல உயிர்களை பறித்திவிட்டது. இது அவர்களின் கொள்கை குறைபாடு" என்றார்.

English summary
Washington branded the beheading of a US journalist a "terrorist attack", upping the stakes in its confrontation with jihadists, as Shiite militiamen killed 70 people at a Sunni mosque in Iraq.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X