For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100 மில்லியன் டாலரை வசூலித்த ஐஸ் பக்கெட் குளியல்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லூ கெரிக்ஸ் என்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்க்கு நிதி திரட்டித் தரும்விதமாக கடந்த மாதம் அமெரிக்காவில் தொடங்கிய ஐஸ் வாளிக் குளியல் என்ற சவால் நிகழ்ச்சி இதுவரை 100 மில்லியன் டாலர் நிதி உதவியினைக் கடந்துள்ளது.

இந்த நோய் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக கடந்த மாதம் 29ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்த மாதம் 29ஆம் தேதி முடிய நன்கொடையாக இந்த நிதியினைத் திரட்டியுள்ளது என்று அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே தேதிகளில் வசூலான தொகை 2.8 மில்லியன் டாலர் என்பதுவும் இவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெற்றிக்குக் காரணம்

வெற்றிக்குக் காரணம்

இந்தப் பொழுதுபோக்கு விளையாட்டின் வெற்றி இதில் பங்கேற்ற விளையாட்டு, அரசியல் மற்றும் வர்த்தகப் பிரபலங்களால் விரைவாகப் பரவியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பில்கேட்ஸ்

பில்கேட்ஸ்

டாம் குரூஸ், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், பில் கேட்ஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், டெய்லர் ஸ்விப்ட் ஆகிய பிரபலங்கள் ஐஸ்பக்கெட்டில் குளியல் நடத்தினர்.

ஷகீரா, லேடி காகா

ஷகீரா, லேடி காகா

ஷகீரா, கடி பெர்ரி, லேடி காகா, போன்ற பிரபலங்களும், இந்தியாவில் பிபாசா பாசு, மந்திராபேடி முதல், கோலிவுட்டில் ஹன்சிகா வரை எல்லோலும் ஐஸ்பக்கெட் சேலஞ்ச்சில் பங்கேற்றனர்.

சானியாவின் குளியல்

சானியாவின் குளியல்

டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை சானியா, தடகளவீரர் உசைன் போல்ட், கிசெலே புன்ட்சென், ஜஸ்டின் பெய்பர், மார்க் சக்கர்பெர்க், நெய்மர், கேட் மோஸ், டேவிட் மற்றும் விக்டோரியா பெக்காம் போன்ற பிரபலங்கள் இதுவரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

நன்றி சொல்ல வார்த்தை

நன்றி சொல்ல வார்த்தை

நன்றி என்ற வார்த்தை இந்த உதவிக்கு ஈடு செய்யப் போதுமானதாக இருக்காது என்று ஏஎல்எஸ் அமைப்பின் தலைவரும், முக்கிய நிர்வாக அதிகாரியுமான பார்பரா நியுஹவுஸ் தெரிவித்தார்.

நிதி உதவி

நிதி உதவி

இந்த நிதி உதவியானது நோய் குறித்த தீவிர ஆராய்ச்சிக்கும், நோய்த்தாக்கம் பெற்றவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆதரவுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
The ALS Association announced on Friday that it had surpassed a significant benchmark: It has raked in more than $100 million from funds donated throughout the duration of the challenge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X