For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளோட ”ஃபேஸ்புக் ஸ்டேட்டஸால்” போண்டியான அப்பாவின் 80,000 டாலர்

Google Oneindia Tamil News

US girl's Facebook post costs her dad $80,000
நியூயார்க்: மகளின் முந்திரிக்கொட்டை பேஸ்புக் ஸ்டேட்டஸால் தந்தை தான் நஷ்ட ஈடாக பெற்ற பணத்தை இழந்த சம்பவம் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

பேட்ரிக் ஸ்னாய் என்பவர் ப்ளோரிடாவின் குல்லிவர் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர்.அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க பள்ளி நிர்வாகம் மறுத்ததால் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில் அவர் வென்றதால் அவருக்கு இழப்பீடாக 80,000 டாலர் தர பள்ளிக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்த செய்தியை அவரது மகள் டானா பேஸ்புக்கில் போட்டு சந்தோஷப்பட்டிருக்கிறாள். அதில், அந்தப் பள்ளி நிர்வாகத்தை திட்டுவது போல எழுதியிருந்தாள். இது பேஸ்புக் மூலம் பரவி கடைசியில் அந்தப் பள்ளிக் கூட நிர்வாகத்தின் பார்வைக்கும் போனது.

அவர்கள் கடுப்பாகி இ்ப்படி செட்டில்மென்ட் ஒப்பந்தம் அமல்படுத்துவதற்கு முன்பே பேஸ்புக்கில் அதைப் போட்டது ஒப்பந்த மீறலாகும். எனவே ஒப்பந்தப்படி பேட்ரிக்குக்கு இழப்பீடு வழங்க முடியாது என்று கூறி விட்டது. இதனால் அவருக்கு கிடைக்க வேண்டிய 80,000 டாலர் பணம் அவரது மகளின் அவசரக்குடுக்கை தனத்தால் கிடைக்காமல் போய் விட்டது..

இதையடுத்து ஸ்னாய் மறுபடியும் கோர்ட்டுக்குப் போனார். கோர்ட்டும், ஸ்னாய் மகள் செய்தது விதி மீறல் என்று உத்தரவிட்டு விட்டது. இதனால் பணம் போனதுதான் மிச்சம்.நல்ல வேளை பள்ளி நிர்வாகம் இதற்கு நஷ்ட ஈடு கேட்காமல் விட்டார்களே என மனதை தேற்றிக் கொள்கிறார் பேட்ரிக்.

English summary
A US girl's snarky Facebook post has cost her father $80,000 he had won in a legal settlement. Patrick Snay, 69, a former headmaster of Gulliver Preparatory School in Florida was set to receive the amount after settling a 2011 age discrimination suit with the school he once headed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X