For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீபாவளி கொண்டாட்டம்; தீர்மானம் நிறைவேற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

White House
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீபாவளியை ஆதரித்து தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதன்முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

செனட் சபையில், செனட் இந்திய குழுவின் துணைத்தலைவர்களான மார்க் வார்னர், ஜான் கோர்னின் ஆகியோர் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தனர். அதில், உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இந்திய-அமெரிக்க உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் கூறப்பட்டு இருந்தது.

இதுபோல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில், கடந்த வாரம் ஜோ கிரவுலி, பீட்டர் ரோஸ்கம் ஆகியோர் தீபாவளிக்கு ஆதரவான தீர்மானத்தை தாக்கல் செய்தனர். அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகள் சார்பிலும் இத்தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மேலும், முதல்முறையாக, அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் என்றும், அதில் இரு அவைகளின் எம்.பி.க்களும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டு இருந்தது.

English summary
Senate Resolution recognizing the "religious and historical significance of the festival of Diwali," passed unanimously in the U.S. Senate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X