For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமூக சேவைக்கான யூனிமிலனோ விருதை பெறும் முதல் இந்தியர் ரமேஷ் விஸ்வநாதன்

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: அமீரக தமிழ் சங்க தலைவர் ரமேஷ் விஸ்வநாதனின் சமூக சேவையை பாராட்டி அவருக்கு மிலனோ பல்கலைக்கழகம் யூனிமிலனோ புரபஷனல் எக்சலென்ஸ் விருதை வழங்க உள்ளது.

UTS president to receive Unimilano Professional Excellence award

இத்தாலியில் உள்ள 113 ஆண்டு கால பழமை வாய்ந்தது மிலனோ பல்கலைக்கழகம். அந்த பல்கலைக்கழகம் அமீரக தமிழ் சங்க தலைவர் ரமேஷ் விஸ்வநாதனின் சமூக சேவையை பாராட்டி அவருக்கு யூனிமிலனோ புரபஷனல் எக்சலென்ஸ் விருதை வழங்க உள்ளது. இந்த விருதை பெரும் முதல் இந்தியர் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு ரமேஷ் சென்னையில் நடந்த விழாவில் மீடியா கில்ட் விருதை பெற்றார். இந்த விருதை பெற்ற முதல் வெளிநாடு வாழ் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

யூனிமிலனோ விருது தனக்கு கிடைக்க உறுதுணையாக இருந்த அமீரக தமிழ் சங்கம், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு ரமேஷ் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

English summary
UAE Tamil Sangam president Ramesh Viswanathan has been selected for the Unimilano Professional Excellence award for community services. He is the first Indian to receive this award.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X