For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாள்பட்ட வலிகளைப் போக்கும் “வைட்டமின் டி”-விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

லண்டன்: உடல்வலியை போக்கும் திறன் கொண்டது "வைட்டமின் டி" என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நாள்பட்ட தசைவலி மற்றும் மூட்டு வலியை "வைட்டமின் டி" குறைக்கும் என இதன் மூலம் கண்டறியப் பட்டுள்ளது.

இதுபற்றி ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் உள்ள எலும்பு முறிவு மருத்துவமனையின் தலைவர் ப்ளோரியான் வெப்னர் , "வைட்டமின் டி குறைவால் "பைப்ரோமாயல்ஜியா" என்னும் நோய் தாக்குகிறது. இந்த நோய் பாதித்தவர்களின் உடல் தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலி குறைவதில்லை.

“Vitamin D” helps to remove longtime body pains…

இந்த வலியால் பாதிக்கப்பட்டோர் தூக்கமின்மை களைப்பு மன அழுத்தம் மற்றும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய நோயாளிகளுக்கு "வைட்டமின் டி" யை போதிய அளவில் அளித்தால் குணமடைய வாய்ப்பு உண்டு.

நோய் முற்றிலும் குணமாகாவிட்டாலும் தசை வலி மற்றும் மூட்டு வலி பெருமளவு குறையும்.இந்த ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பேருக்கு "வைட்டமின் டி' மருந்துகள் அளிக்கப்பட்டன.

இருபது வாரங்கள் "வைட்டமின் டி" மருந்துகளை உட்கொண்டவர்களின் நீண்டநாள் வலிகள் பெருமளவு குறைந்தது கண்டறியப்பட்டது. அவர்களிடம் மன அழுத்தம் சிறிதும் காணப்படவில்லை" இவ்வாறு வெப்னர் கூறியுள்ளார்.

English summary
“Vitamin D” is very useful for body pain and long time pains, London scientists find out this new invention.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X