For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அடக்கத் துடிக்கும் 'பெஷ்மெர்கா' பெண்கள் யார்?

By Siva
Google Oneindia Tamil News

பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டூழியத்தை கட்டுப்படுத்த குர்திஸ்தான் ராணுவமான பெஷ்மெர்காவின் பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் துடிக்கிறார்கள்.

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் குர்த் இன மக்கள் அதிகம் வசிக்கும் ஈராக்கின் வடக்கு பகுதியில் தொடர்ந்து நாச வேலையில் ஈடுபட்டுள்ளனர். இது குர்திஸ்தான் ராணுவமான பெஷ்மெர்காவின் பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர்களை ஆத்திரம் அடைய வைத்துள்ளது.

இந்த பெண் படை, அவர்களின் கோபம் குறித்த விவரம் வருமாறு,

குர்திஸ்தான்

குர்திஸ்தான்

துருக்கியின் கிழக்கு பகுதி, ஈராக்கின் வடக்கு பகுதி, ஈரானின் வடமேற்கு பகுதி, சிரியாவின் வடகிழக்கு பகுதி ஆகியவற்றை சேர்த்தது தான் குர்திஸ்தான். குர்த் இன மக்கள் அதிகம் வசிக்கும் இடம் ஆகும்.

தீவிரவாதிகள்

தீவிரவாதிகள்

குர்திஸ்தான் ராணுவமான பெஷ்மெர்காவின் பெண்கள் பிரிவு தங்கள் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக செய்யும் அட்டூழியங்களை பார்த்து கோபம் அடைந்துள்ளது.

அனுப்புங்கள்

அனுப்புங்கள்

எங்களை அனுப்பி வையுங்கள் அந்த தீவிரவாதிகளை அடக்குகிறோம் என்று துடிக்கிறார்கள் பெஷ்மெர்கா பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

பெஷ்மெர்கா

பெஷ்மெர்கா

பெஷ்மெர்காவின் பெண்கள் பிரிவு குர்திஸ்தான் பெண்கள் வீட்டுக்குள் அடைந்து கிடப்பவர்கள் இல்லை, மாறாக ஆண்களுக்கு நிகராக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுபவர்கள் என்பதை நிரூபிக்கும் வண்ணம் உள்ளது.

போராட்டம்

போராட்டம்

நாங்கள் தற்போது தீவிரவாதிகளை எதிர்த்து போராடுகிறோம். எனக்கு திருமணமாகி மகள் உள்ளார். என் மகளை என் பெற்றோரிடம் விட்டு வந்துள்ளேன். குர்திஸ்தானுக்காக போராடுவதில் பெருமை அடைகிறேன். என் நாட்டை காக்கவும், பெண்களை பாதுகாக்கவும் தான் நாங்கள் போராடுகிறோம் என்று பெஷ்மெர்கா உறுப்பினரான செலான் ஷக்வான் தெரிவித்துள்ளார்.

1996

1996

1990களில் குர்திஸ்தான் உள்நாட்டு போர் நடந்ததையடுத்து 1996ம் ஆண்டு பெஷ்மெர்காவின் பெண்கள் பிரிவை உருவாக்கி ஆட்களை சேர்த்து பயிற்சி அளித்தனர்.

English summary
The women wing of Kurdistan army named Peshmerga has decided to show ISIS terrorists their place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X