For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புடின் தெம்பாக இருக்க என்ன காரணம் தெரியுமா?.. இவங்கதானாம்!

Google Oneindia Tamil News

பான்: உக்ரைன் ஒரு பக்கம் கதறுகிறது.. அதை வைத்து பல லாபங்களைப் பெறத் துடிக்கும் அமெரிக்காவோ மறுபக்கம் பதறுகிறது.. ஆனால் "சுயநலமான" சில ஐரோப்பிய நாடுகளை பலமாக கொண்டு ரஷ்யா ஆடாமல் அசையாமல் அமைதியாக இருக்கிறது.. அதிகரிக்கும் உலக நாடுகளின் நெருக்கடியைக் கண்டு பயப்படாமல்!.

உண்மையில் புடின் தலைமையிலான ரஷ்ய அரசுக்கு சில ஐரோப்பிய நாடுகள்தான் மறைமுக பலமாக உள்ளனவாம். வெளியில் என்னதான் கூப்பாடு போட்டாலும் கூட இந்த ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை பகிரங்கமாக பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பதே உண்மை.

காரணம், இந்த நாடுகள், ரஷ்யாவால் பல விதங்களிலும் பலன் அடைந்து வருகின்றன. இவர்கள் அமெரிக்காவை விட ரஷ்யாவை நம்புவதையே நல்லது என்று நினைக்கிறார்கள். காரணம், அமெரிக்கா ஒரு "பச்சோந்தி" என்பதால் மட்டுமல்ல, தங்களை விட அது பெரிய சுயநல நாடு என்பதால். ஆனால் ரஷ்யா அப்படி அல்ல என்பதும் கூட ஒரு முக்கியக் காரணம்.

இதனால்தான் உக்ரைன் விவகாரத்தில் கூட இந்த நாடுகள் சற்று விலகியே இருக்கின்றனவாம். இதனால்தான் அமெரிக்காவால் பெரியண்ணன் ஸ்டைல் வேலையை ரஷ்யாவிடம் காட்ட முடியாமல் போனதற்குக் காரணம் என்கிறார்கள்.

ஜெர்மனி -இத்தாலி - பிரான்ஸ்

ஜெர்மனி -இத்தாலி - பிரான்ஸ்

இந்த மூன்று நாடுகள்தான் ரஷ்யாவுக்கு நெருக்கமான ஐரோப்பிய நாடுகள். இவர்களுக்கு ரஷ்யாவால் நிறைய பயன்கள், லாபங்கள் உள்ளன. எனவேதான் இவர்கள் ரஷ்யாவை பகிரங்கமாக பகைத்துக் கொள்ளாமல், கண்டிக்காமல் கமுக்கமாக உள்ளனராம்.

நெருக்கடி வந்தால் கை கொடுப்பார்கள்

நெருக்கடி வந்தால் கை கொடுப்பார்கள்

எப்போதெல்லாம் ரஷ்யா மீது பொருளாதார தடை உள்ளிட்ட நெருக்கடிகள் வருகிறதோ, அப்போதெல்லாம் இவர்கள் ரஷ்யாவுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவாக நிற்பது வழக்கம்.

காரணம்... வர்த்தகம்

காரணம்... வர்த்தகம்

இதற்கு முக்கியக் காரணம், இவர்கள் ரஷ்யாவுடன் கொண்டுள்ள ஆழமான, வர்த்தகத் தொடர்புகள்தான்.

கிரீமியா விவகாரத்தின்போது

கிரீமியா விவகாரத்தின்போது

கிரீமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட போது பல உலக நாடுகள் அதைக் கண்டித்தன. பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் எத்தனித்தன. ஆனால் அப்படி எதுவும் நேராமல் இந்த நாடுகள் பார்த்துக் கொண்டனவாம்.

அமெரிக்காவும்தான்

அமெரிக்காவும்தான்

ஒரு வகையில் கிரீமியா விவகாரத்தில் அமெரிக்காவே கூட ரஷ்யாவை முழுமையாக எதிர்க்கவோ, நடவடிக்கை எடுக்கவோ முன்வரவில்லை என்பதே உண்மை.

தலையிட தயக்கம்

தலையிட தயக்கம்

மேலும் உக்ரைன் விவகாரத்தில் முழுமையாக தலையிட்டு குட்டுப்பட அமெரிக்காவும் கூட விரும்பவில்லை, தயக்கம் காட்டுகிறது என்பதே உண்மை.

ரஷ்யாவை நம்பியுள்ள ஜெர்மனி

ரஷ்யாவை நம்பியுள்ள ஜெர்மனி

ஜெர்மனியைப் பொறுத்தவரை அது பொருளாதார ரீதியாக ரஷ்யாவைத்தான் அதிகம் நம்பியுள்ளது. இதை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார் புடின் என்கிறார்கள்.

கச்சா எண்ணெய் - காஸ்

கச்சா எண்ணெய் - காஸ்

ரஷ்யாவிலிருந்து பெருமளவில் கச்சா எண்ணெய்யையும், காஸையும் ஜெர்மனியும், இத்தாலியும் பெற்றுப் பயனடைந்து வருகின்றன. பிற நாடுகளை விட இந்த நாடுகளுக்கு சற்று சலுகை காட்டி இவற்றை வழங்குகிறது ரஷ்யா.

40 பில்லியன் கன அடி மீட்டர் காஸ்

40 பில்லியன் கன அடி மீட்டர் காஸ்

கடந்த ஆண்டு ரஷ்யாவிலிருந்து 40 பில்லியன் கன அடி மீட்டர் அளவிலான காஸை ஜெர்மனி வாங்கியுள்ளது. கடந்த ஆண்டு ரஷ்யா மேற்கு ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்த காஸ் அளவு 127 பில்லியன் கன அடி மீட்டராகும்.

இத்தாலிக்கு 26 பில்லியன்

இத்தாலிக்கு 26 பில்லியன்

அதேபோல இத்தாலி, கடந்த ஆண்டு 26 பில்லியன் கன அடி மீட்டர் காஸை ரஷ்யாவிடமிருந்து வாங்கியது.

அதுக்குப் பதில் இது

அதுக்குப் பதில் இது

இதற்குப் பதில் ரஷ்யாவுக்கு கடந்த ஆண்டு 36 பில்லியன் ஈரோ மதிப்பிலான பொருட்களை ரஷ்யா வாங்கியுள்ளது.

ஸ்டிராங்காக இருந்தாலும் வீக்தான்

ஸ்டிராங்காக இருந்தாலும் வீக்தான்

பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஜெர்மனியின் பொருளாதாரம் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் வளர்ச்சி இல்லை. தேக்க நிலைதான் காணப்படுகிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளைத் தாண்டி அதற்கென்று பெரிய ஏற்றுமதி சாத்தியம் அவ்வளவு நன்றாக இல்லை.

ரஷ்யாவை ஒதுக்கினால்...

ரஷ்யாவை ஒதுக்கினால்...

இந்த நிலையில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முடக்கப்பட்டால் ஜெர்மனிக்குத்தான் பெரும் பாதிப்பு வரும். அப்படிப்பட்ட நிலையை அது விரும்பவில்லை. இதே கதைதான் இத்தாலி, பிரான்ஸிலும் உள்ளது. மேலும் அமெரிக்காவின் அடி வருடியாக இருக்கவும் இவர்கள் விரும்பவில்லை.

ஆயுத வியாபாரத்தை நம்பி பிரான்ஸ்

ஆயுத வியாபாரத்தை நம்பி பிரான்ஸ்

ஜெர்மனியைப் போல ரஷ்யாவின் காஸை நம்பி பிரான்ஸ் இல்லை என்ற போதிலும், அது ரஷ்யாவுடன் பாதுகாப்புத்துறையில் முக்கிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது. அதை முறித்துக் கொள்ள பிரான்ஸ் விரும்பவில்லை.

உக்ரைனைத் தாக்க பிரான்ஸ் ஆயுதங்கள்

உக்ரைனைத் தாக்க பிரான்ஸ் ஆயுதங்கள்

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக கருங்கடல் பகுதியில் 2 தாக்குதல் ஹெலிகாப்டர்களுடன் கூடிய கப்பல்களை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது. இது பிரான்ஸ் வழங்கியதாகும். இந்த இடத்திலிருந்து உக்ரைன் வான்வெளியில் பறக்கும் எந்த விமானத்தையும் தாக்கி அழிக்க முடியும்.

இங்கிலாந்தின் கதையைப் பாருங்கள்

இங்கிலாந்தின் கதையைப் பாருங்கள்

ரஷ்யாவிடமிருந்து இங்கிலாந்து ஆண்டு தோறும் 6.3 பில்லியன் பவுண்டு மதிப்பிலான இறக்குமதியைச் செய்கிறது. அதேசமயம், ஏற்றுமதியின் அளவு 3.7 பில்லியனாக இருக்கிறது. இங்கிலாந்தின் 12 சதவீத கச்சா எண்ணெய்யை ரஷ்யதான் வழங்குகிறது.

நெதர்லாந்தும் கூட

நெதர்லாந்தும் கூட

நெதர்லாந்து ரஷ்யாவுக்கு ஆண்டு தோறும் 6.3 பில்லியன் பவுண்டு அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஆனால் இறக்குமதி அளவோ 22.9 பில்லியனாக உள்ளது. ரஷ்யா. நெதர்லாந்துக்குத் தரும் கச்சா எண்ணெய் அளவு 28 சதவீதமாகும். காஸ் 11 சதவீதமாகும்.

பங்காளிகள்.. பகையாளிகள்... !

பங்காளிகள்.. பகையாளிகள்... !

எனவே அமெரிக்காவுக்கு ஐரோப்பிய நாடுகளை ரஷ்யாவுக்கு எதிராக வளைக்க முடியாமல் போனதற்கு இதுதான் காரணம். இதனால்தான் மற்ற நாடுகள் மீது குண்டக்க மண்டக்க நடவடிக்கை எடுக்கும் அமெரிக்கா, ரஷ்யா மீது மட்டும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கை வைக்க முடியாமல் போனதற்கு இவைதான் காரணம்.

English summary
There seems little doubt that the pro-Russian separatists of East Ukraine have on their hands the blood of the 298 men, women and children whom they killed when they shot down Malaysian Airways flight MH17 with a surface-to-air-missile. And no hands are bloodier than those of their puppet-master Vladimir Putin. However, the stain of guilt extends to Germany, France and Italy, whose leaders have disgracefully done so little to bring the Russian leader and his fellow Kremlin gangsters to heel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X