For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸ்திரேலியா கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் மீது ஷூ வீசி தாக்குதல் நடத்திய பெண்

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஹிலாரி கிளிண்டன் மீது பெண் ஒருவர் ஷூவை வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மாண்டலே பே ஹோட்டல் ஒன்றில் முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளின்டன் நேற்று உரையாற்றினார்.

அப்போது பாதுகாவலர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் ஹிலாரி மீது பொருள் ஒன்றைத் தூக்கி எறிந்தார். பின்னர் அது ஷூ எனக் கண்டறியப்பட்டது.

Woman throws object at Hillary Clinton, later says it was a shoe

உடனடியாக தாக்குதல் நடத்திய அந்த பெண்ணை ஹோட்டல் பாதுகாவலர்கள் மற்றும் அமெரிக்க ரகசிய சேவை முகவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற்றினர்.

தாக்குதலால் முதலில் அதிர்ச்சியடைந்த ஹிலாரி பின்னர் சுதாரித்துக் கொண்டு தனது பேச்சைத் தொடர்ந்தார்.

தாக்குதல் நடத்திய பெண் யார் எதனால் இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டார் என்பதுகுறித்தான செய்தியாளர்களின் கேள்விக்கு விசாரணைக்குப் பின் பதிலளிப்பதாக பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகவலை அமெரிக்க ரகசிய சேவை செய்தி தொடர்பாளர் ஜார்ஜ் உறுதி செய்துள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த 2008ம் ஆண்டு ஜார்ஜ் புஷ் மீது செருப்பு வீச்சுத் தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
A protester threw what she later said was a shoe at Hillary Clinton on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X