For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிகரிக்கும் பூமியின் வெப்பம்- அழியும் பாரம்பரிய சின்னங்கள்

Google Oneindia Tamil News

லண்டன்: உலகின் பாரம்பரிய சின்னங்கள் எல்லாம் உலக வெப்பமயமாதல் பிரச்சனையால் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

உலகளவில் தற்போது காணப்படும் வெப்பமயமாதல் போக்குகள் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நீடிக்கும் அபாயம் உருவாகி உள்ளது.

உயரும் கடல்மட்டங்களால் அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை, ஆஸ்திரேலியாவின் ஒபரா ஹவுஸ் போன்ற முக்கியமான பாரம்பரிய தலங்களை இழக்க நேரிடும் என்று புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கின்றது.

யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள்:

யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள்:

யுனெஸ்கோவின் பாரம்பரியத் தலங்கள் பட்டியலில் தற்போது 720 இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் வெப்பநிலையினால் உயரும் கடல் மட்டமானது, இந்தப் பாரம்பரியத் தலங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பாரம்பரியம் பலியாகும் அபாயம்:

பாரம்பரியம் பலியாகும் அபாயம்:

சுதந்திரதேவி சிலை, இண்டிபெண்டன்ஸ் ஹால், லண்டன் டவர், சிட்னி ஓபரா ஹவுஸ் போன்ற 136 தலங்கள் அடுத்த 2000 ஆண்டுகளில் தற்போது காணப்படும் உலக வெப்பமயமாதல் போக்கு தொடர்ந்து, தொழில்துறை வெப்ப அளவும் மூன்று டிகிரி உயர்ந்தால் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தலங்களை பாதிக்கும் வெப்பமயமாதல்:

தலங்களை பாதிக்கும் வெப்பமயமாதல்:

இவை மட்டுமின்றி, புருக், நேப்பிள்ஸ், ரிகா, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மையங்கள், வெனிஸ் மற்றும் அதன் காயல் பகுதிகள், ரோபன் தீவு, வெஸ்ட்மினிஸ்டர் அபே போன்ற முக்கிய தலங்களும் பாதிப்படையும் என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

உருகும் பனி:

உருகும் பனி:

உலக வெப்பமயமாதலுக்கு பதிலளிக்கும் விதமாக கண்டங்களில் உருகும் பனி மற்றும் வெப்ப உயர்வு போன்றவற்றால் கடல் மட்டங்கள் மெதுவாக ஆனால் அதே சமயம் சீராக உயர்ந்து வருகின்றன. இந்த நிலை சுற்றுச்சூழல் வெப்ப உயர்வு நின்றபிறகும் தொடர்ந்து காணப்படும் என்று ஆஸ்திரியாவின் இன்ஸ்ப்ரக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணி எழுத்தாளரான பேராசிரியர் பென் மர்சியான் குறிப்பிடுகின்றார்.

பனி இழப்பீடு:

பனி இழப்பீடு:

2000 ஆண்டுகளில் சமுத்திரங்கள் புதிய சமநிலையை அடைவதை நாம் கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகா பகுதிகள் இழக்கும் பனி இழப்பீடைக் கொண்டு கணக்கிடமுடியும். அதேசமயம் நாம் பாதுகாக்கும் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பாதுகாக்க இந்த கால அளவுகள் போதுமானவையாக இருக்கும் என்று போஸ்ட்டாம் காலநிலைத் தாக்கம் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுப் பேராசிரியரும், இணை ஆசிரியருமான ஆண்டர்ஸ் லெவர்மான் தெரிவிக்கின்றார்.

English summary
world's historical places and heritage will be destroyed by global warming scientists says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X