For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழிந்து வரும் ‘ஒய்’ குரோமோசோம்!. ஆண்களின் ஆயுள் குறைய காரணமாம்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஆண்களின் ரத்த செல்களில் ஒய் குரோமோசோமின் அளவு நாளுக்கு நாள் குறைவதனாலேயே ஆணின் ஆயுள் குறைவதாகவும், அவர்களை கேன்சர் உள்ளிட்ட நோய் தாக்குவதாகவும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு 'ஒய் குரோமோசோம்' செக்ஸ் உறவுக்கு மட்டுமல்ல, அவர்களின் ஆயுளுக்கும் முக்கிய காரணியாக உள்ளது என்றும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெண்களை விட ஆண்களுக்கு ஆயுள் குறைவு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது ஆண்களில் ஆயுள் எதனால் குறைகிறது என்பதை பிரிட்டனில் உப்சலா பல்ககைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

குரேமோசோம்கள்

குரேமோசோம்கள்

உயிரினங்கள் அனைத்தும் செல் எனப்படும் நுண்ணிய பகுதியால் ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செல்லினுள்ளும் 46 குரோமோசம்கள் உள்ளன. இந்த குரோமோசோமிற்குள் மனித வம்ச பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கிய வளை போன்ற நுண்ணிய துணுக்குகளான நியூக்ளிக் அமிலங்கள் அதாவது டி. என். ஏ. (D.N.A.) (டி ஆக்ஸிரிபோ நியூக்ளிக் ஆசிட்) உள்ளன.

ரத்த மாதிரி சோதனை

ரத்த மாதிரி சோதனை

உலக அளவிலான ஆராய்ச்சியார்கள் குழு ஒன்று வயது முதிர்ந்த ஆண்கள் 1600 பேரின் ரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்தனர்.

ஒய் குரோமோசோம்

ஒய் குரோமோசோம்

ஆய்வில் பங்கேற்ற அனைவருக்கும் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களில் ஒய் குரோமோசோம் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. இதனாலேயே ஆணின் ஆயுள் குறைகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளா பெண்கள்

கேரளா பெண்கள்

இந்தியாவில் கேரள கிராமப்புறங்களில் வாழும் பெண்கள் தான் மிக அதிகமாக 77.2 வயது வரை வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அழிந்து வரும் ஆண் இனம்

அழிந்து வரும் ஆண் இனம்

ஆண்களின் ‘ஒய்' குரோமோசோம் பாதிக்கப்பட்டு வருவதன் காரணமாக எதிர்காலத்தில் ஆண்குலமே அழிந்துபோகும் என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்.

நிரந்தர அழிவிற்கு காரணம்

நிரந்தர அழிவிற்கு காரணம்

ஆண் குரோமோசோம் எனப்படும் ‘ஒய்' குரோமோசோம்களுக்குள் உள்ளேயே உள்ள அழியும் தன்மையால் ஆண்கள் நிரந்தர அழிவை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார் ஆஸ்திரேலியாவின் முன்னணி பெண் விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியை கிரேவ்ஸ்

எக்ஸ் குரோமோசோம்

எக்ஸ் குரோமோசோம்

பெண் குரோமோசோமான ‘எக்ஸ்' குரோமோசோமிலும், ஆண் குரோமோசோமான ‘ஒய்' குரோமோசோமிலும் உள்ள ஜீன்களின் எண்ணிக்கையை ஆதாரமாகச் சுட்டிக் காட்டிகிறார் இந்த விஞ்ஞானி. எக்ஸ் குரோமோசோமில் சுமார் 1000 ஆரோக்கியமான ஜீன்கள் உள்ளன.

ரொம்ப பலவீனமானது…

ரொம்ப பலவீனமானது…

பெண்களிடம் இரண்டு ‘எக்ஸ்' குரோமோசோம்கள் இருக்கின்றன. ஆண்களிடம் இருப்பது ஓர் ஒற்றை எக்ஸ் குரோமோசோமும், ‘பலவீனமான' ஒரு ‘ஒய்' குரோமோசோமும்தான்.

குறைந்து வரும் ஜீன்கள்

குறைந்து வரும் ஜீன்கள்

நவீன ஆணிடம் உள்ள ‘ஒய்' குரோமோசோமில் சுமார் 100 ஜீன்கள்தான் உள்ளன. ஆண்களும் ‘ஒய்' குரோமோசோமில் பெண்களைப் போல ஆயிரத்துக்கும் அதிகமான ஜீன்களைக் கொண்டிருந்தார்கள்தான்.

ஆனால் லட்சக்கணக்கான ஆண்டுகளில் ஆண்களிடம் ஜீன்களின் என்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது இந்த நிலையில் நிற்கிறது.

அழிவிற்கு காரணம்

அழிவிற்கு காரணம்

பெண்களின் எக்ஸ் குரோமோசோம் ஜோடியாக உள்ளதால் அதனால் பழுதுகளைச் சரிசெய்துகொள்ள முடிகிறது. ஆனால் ஜோடியில்லாத ஆணின் ‘எக்ஸ்' குரோமோசோம் பழுதுகள், குறைகளை சரிசெய்யத் தவித்து கடைசியில் அழிகிறது.

குப்பைதானாம்

குப்பைதானாம்

ஆண்களின் ஒய் குரோமோசோமில் தற்போது எஞ்சியுள்ள ஜீன்களும் ‘குப்பைகள்' தான் என்கிறார், பேராசிரியை கிரேவ்ஸ். "இது ஒரு மோசமான சூழ்நிலை. பரிமாண விபத்து. ஆண்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்!" என்றும் அனுதாபம் காட்டுகிறார் ஆராய்சியாளர் கிரேவ்ஸ்.

பீதி அடையத் தேவையில்லை…

பீதி அடையத் தேவையில்லை…

ஆனால் ராபின் லாவல் பாட்ஜ் போன்ற வேறு சில விஞ்ஞானிகள், ஆண்கள் அப்படியொன்றும் பீதியடையத்தேவையில்லை என்று தெம்பூட்டுகிறார்கள்.

50 லட்சம் ஆண்டுகள்

50 லட்சம் ஆண்டுகள்

ஆம், ஆண் குழந்தைக்குக் காரணமான ‘ஒய்' குரோமோசோம் முற்றிலுமாக அழிந்து போவது என்றாலும் 50 லட்சம் ஆண்டுகள் ஆகுமாம். ஸ்ஸ்ஸ் அப்பாடா...என்று யாரோ நிம்மதி பெருமூச்சு விடுவது காதில் கேட்கிறதே?

English summary
The loss of the Y chromosome in blood cells may be linked to a shorter lifespan and higher cancer risk in men, according to a new study. The analysis of the Y chromosome could in the future become a useful bio-marker to predict men's risk of developing cancer, researchers said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X