For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமன்வெல்த்தில் 51 பதக்கங்கள் குவித்த இந்தியா - குத்துச்சண்டை பிரிவிலும் பதக்க எதிர்பார்ப்பு!

கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டிகளில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங் தலைமையிலான இந்திய வீரர்கள் 9 ஆவது நாளான இன்று பதக்கங்களை வெல்லும் பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று தெரிகின்றது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 20வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

வெள்ளிப் பதக்கம்

வெள்ளிப் பதக்கம்

இன்றைய குத்துச்சணடை போட்டிகளில் பங்குபெறும் 4 வீரர்கள் கண்டிப்பாக பதக்கத்தை வெல்வார்கள் என்று தெரிகின்றது. முன்னதாக டேபிள் டென்னிஸ் வீரர்களான அச்சந்தா சரத் கமல் மற்றும் அந்தோணி அமல்ராஜ் வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளனர்.

இறுதியில் விஜேந்தர்சிங்

இறுதியில் விஜேந்தர்சிங்

நட்சத்திர குத்துச்சண்டை வீரரான விஜேந்தர் சிங், அயர்லாந்து வீரரான கோனர் கோய்லேயை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

வெண்கலம் வென்ற பிங்கி ராணி

வெண்கலம் வென்ற பிங்கி ராணி

மான்தீப் ஜங்கரா, லைசாராம் தேவேந்த்ர சிங், சரிதா தேவி ஆகியோரும் இறுதிச் சுற்றுக்கு சென்ற நிலையில், பெண்கள் பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை பிங்கி ராணி வெண்கலமே பெற்றார்.

வெள்ளி வென்ற சீமா

வெள்ளி வென்ற சீமா

பெண்களுக்கான வட்டு எறிதல் பிரிவில் சீமா புனியாவும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். கிருஷ்ணா போனியாவுடனான போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.

51 பதக்கங்களுடன்..

51 பதக்கங்களுடன்..

இப்பதக்கங்களின் அடிப்படையில் 13 தங்கம், 23 வெள்ளி, 15 வெண்கலப்பதக்கங்கள் என்று 51 பதக்கங்களுடன் இந்தியா 5 ஆவது இடத்தில் உள்ளது. மேலும், 140 பதக்கங்களுடன் இங்கிலாந்து முதலிடத்திலும், 124 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இன்றும் பதக்க வேட்டை

இன்றும் பதக்க வேட்டை

இதனால், இன்றைய குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபெறும் மான்தீப் ஜங்கரா, லைசாராம் தேவேந்த்ர சிங், சரிதாதேவி, விஜேந்தர் சிங் ஆகியோர் பதக்கத்தை தட்டிச் செல்வார்கள் என்று தெரிகின்றது.

Story first published: Saturday, August 2, 2014, 11:04 [IST]
Other articles published on Aug 2, 2014
English summary
Led by Olympic bronze medallist Vijender Singh, Indian pugilists stole the limelight on the ninth day of the competitions with four of them assuring silver medals for India while table tennisplayers Achanta Sharath Kamal and Anthony Amalraj bagged a silver in the men's doubles event of the 20th Commonwealth Games in Glasgow.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X