For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மில்லியன் ரசிகர்கள் கூட்டத்துடன் சொல்லி அடித்த ”சூப்பர்பவுல்” கில்லி…!

நியூயார்க்:அமெரிக்க தேசிய கால்பந்து லீக்கின், சூப்பர்பவுல் பேஸ்பால் போட்டியின் இறுதி ஆட்டத்தை தொலைக்காட்சி மூலம் பல லட்சம் பேர் பார்த்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவில் மிக பிரபலமான விளையாட்டுக்களில் ஒன்றுதான் இந்த சூப்பர் பவுல் போட்டி. வருடா வருடம் நடைபெறும் இந்தப் போட்டிக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. டிவியில் இதைப் பார்க்க அலை மோதுவார்கள்.

இந்த ஆண்டு போட்டியை டிவி மூலம் பார்த்ததில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை நடந்த சூப்பர் பவுல் போட்டிகளைப் பார்த்தவர்களை விட இந்த முறை அதிக அளவில் பார்த்துள்ளனர்.

American Super bowl got breakthrough by million views in the American history..

இறுதிப் போட்டியில் டென்வர் பிரான்காஸ் மற்றும் சியாட்டில் சீஹாக்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டென்வர் தோல்வியுற்றது. கோப்பையை வென்றது சியாட்டில் சீஹாக்ஸ்.அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டென்வர் தோற்றாலும் கூட ரசிகர்கள் போட்டியை தொடர்ந்து ரசித்துப் பார்த்தனர்.

அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிகமாக ரசிக்கப்பட்ட சூப்பர் பவுல் போட்டி இந்த சூப்பர்பவுல் 2014 தான் என்று நியூயார்க்கைச் சேர்ந்த அலெக்ஸ் விப்ரென் கூறியுள்ளார்.

இந்தப் போட்டியை டிவி மூலம் 111.5 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு கடந்த 2013ஆம் ஆண்டில் பால்டிமோர் ராவன்ஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோ போர்டிநயனர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சூப்பர் பவுல் போட்டியை 108.41 மில்லியன் ரசிகர்கள் பார்த்ததே சாதனையாக இருந்தது.

மேலும், கடந்த 2011 மற்றும் 2012ஆம் ஆண்டில் நடந்த தொடரில் இறுதிப் போட்டியில் பெறப்பட்ட வெற்றியை விட இந்த வருடம் மிகப் பெரிய ஸ்கோரை வெற்றி பெற்ற அணி ஈட்டியது. அதாவது, 43-8 என்ற புள்ளிகள் கணக்கில் சீஹாக்ஸ் அணி டென்வரை வீழ்த்தியது.

Story first published: Tuesday, February 4, 2014, 14:47 [IST]
Other articles published on Feb 4, 2014
English summary
The 2014 Super Bowl was the most watched Super Bowl in the game's history, Capital New York's Alex Weprin reported Monday. The game brought in 111.5 million viewers, making it the most watched TV show in US history
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X