For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

அர்ஜென்டினா-நெதர்லாந்து போட்டியின் திக்..திக்.. நிமிடங்கள்

By Veera Kumar

ரியோடி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்தாட்டத்தின் இரண்டாவது அரையிறுதியில் நெதர்லாந்தை, பெனால்டி ஷூட் மூலம் தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது அர்ஜென்டினா. இரு அணிகளுமே சம பலத்துடன் மோதியதால் ஆட்டம் முழுவதுமே அனல் பறந்தது. போட்டி நேரத்திலும், கூடுதல் நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. அந்த பரபரப்பான ஆட்டத்தின் உயிர்ப்புள்ள படங்கள் உங்கள் பார்வைக்கு

யப்பா.. என்னா நீளம்

யப்பா.. என்னா நீளம்

மேலே பறந்து வந்த பந்தை தனது தலையால் தட்டி லாவகமாக கொண்டு செல்லலாம் என்று நினைத்து அர்ஜென்டின வீரர் சேவியர் மஸ்கரேனோ முயன்றார். அப்போது அவரின் தலைக்கு மேலே காலை நீட்டி பந்தை தன் வசத்துக்கு கொண்டு வந்தார் நெதர்லாந்தின் ஜார்ஜினியோ விஜ்னால்டம்.

போடா அந்தபக்கம்

போடா அந்தபக்கம்

பந்தை துரத்தி ஓடிக்கொண்டிருந்தபோது ஆத்திரமடைந்த அர்ஜென்டினா வீரர் மார்ட்டின் டிமைக்கேலிசிஸ், நெதர்லாந்தின் நட்சத்திர வீரர் அர்ஜென் ரோபனை பிடித்து தள்ளிவிடுகிறார். அவரும் ஐயோ.. அம்மா.. என்று மைதானத்தில் சாய்ந்தார்.

மெஸ்சியிடம் சிக்கினால் அவ்ளோதான்..

மெஸ்சியிடம் சிக்கினால் அவ்ளோதான்..

மெஸ்சியிடம் பந்து சிக்கினால் கோல் போட்டுவிடுவார் என்ற பயத்தில் நெதர்லாந்தின் ரோன் விளார், காலை குறுக்கே விட்டு பந்தை விலக்க முயற்சி செய்கிறார்.

நாங்களும் தடுப்போமில்ல..

நாங்களும் தடுப்போமில்ல..

நெதர்லாந்தின் கோல் கீப்பர் ஜஸ்பர் சிலேசென் அர்ஜென்டினா வீரர் கோல் போட விடாமல் பந்தை துள்ளி சமயோஜிதமாக பிடித்த காட்சி.

அர்ஜென்டின கீப்பர் அபாரம்

அர்ஜென்டின கீப்பர் அபாரம்

பெனால்டி ஷூட் நேரத்தில் நெதர்லாந்தின் ரான் விளார் அடித்த பந்தின் குறுக்கே ஒட்டு மொத்த உடலையும் நீட்டி அணை கட்டி கோலை தடுத்த அர்ஜென்டின கோல் கீப்பர் செர்ஜியோ ரொமேரோ.

ஆட்டு கிடா சண்டை

ஆட்டு கிடா சண்டை

ஆட்டம் பரபரப்பாக சென்றுகொண்டிருந்தபோது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றனர் வீரர்கள். நெதர்லாந்தின் ராபின் வான் பெர்சியும், அர்ஜென்டினாவின் எசேகியேல் காரேயும் ஆட்டுக்கிடா போல தலையால் முட்டி சண்டை போட்ட தருணம்.

இது எப்படி இருக்கு..

இது எப்படி இருக்கு..

பெனால்டி ஷூட் நேரத்தில் பந்துகளை தடுத்து தனது அணியை காப்பாற்றிய அர்ஜென்டினா கோல் கீப்பர் செர்ஜியோ ரொமேரோ அந்த சாதனை மகிழ்ச்சியை ரசிகர்கள் முன்னிலையில் வெளிப்படுத்திய காட்சி.

சண்டையில கழற்றாத சட்டை எங்க இருக்கு

சண்டையில கழற்றாத சட்டை எங்க இருக்கு

24 வருடங்களுக்கு பிறகு இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற மகிழ்ச்சியில், சட்டையை கழற்றி, சுழற்றியபடி மைதானத்தில் இருந்து வெளியே வரும் கேப்டன், மெஸ்சி உள்ளிட்ட அர்ஜென்டின வீரர்கள்.

Story first published: Friday, July 11, 2014, 16:23 [IST]
Other articles published on Jul 11, 2014
English summary
The semi final match between Argentina and Netherlands gets huge attention from fans as well as worldwide viewers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X