For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2015 உலகக் கோப்பைப் போட்டிக்கும் ரவி சாஸ்திரியே டைரக்டர்.. டங்கன் 'தலையும்' தப்பியது!

மும்பை: 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இணைந்து நடத்தவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கும் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் இயக்குநராக செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் உலகக் கோப்பைப் போட்டி வரை பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், துணை பயிற்சியாளர்களான ஸ்ரீதர், சஞ்சய் பாங்கர், பரத் அருண் ஆகியோரும் தங்களது பணியில் நீடிப்பார்கள் என்றும் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

BCCI appoints Ravi Shastri as the Director of Indian team till 2015 WC

இங்கிலாந்துக்குச் சென்றிருந்த இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரில் செம அடி வாங்கியது. இதனால் கடும் அதிருப்தி அலைகள் இந்தியாவில் எழுந்தன. இதையடுத்து ஒரு நாள் தொடரில் தப்பிப் பிழைப்பதற்காக ரவி சாஸ்திரியை இயக்குநராக நியமித்தது கிரிக்கெட் வாரியம். இந்தப் பதவி புதிதாக உருவாக்கப்பட்டதாகும்.

மேலும் ரவி சாஸ்திரிக்கு பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் ரிப்போர்ட் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. கூடுதலாக சஞ்சய் பாங்கர், பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோரும் இணைப் பயிற்சியாளர், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சிக்காக நியமிக்கப்பட்டனர்.

இவர்களின் நியமனத்திற்குப் பின்னர் நடந்த ஒரு நாள் தொடரை இந்தியா சிறப்பாக ஆடி வென்றது. இதையடுத்து தற்போது சாஸ்திரி அன் கோவின் பதவிக்காலத்தை நீட்டித்துள்ளது கிரிக்கெட் வாரியம்.

இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் செயற் குழு கூடி இவர்களின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டித் தொடர் வரை நீட்டித்து முடிவெடுத்தது.

Story first published: Friday, September 26, 2014, 17:35 [IST]
Other articles published on Sep 26, 2014
English summary
It was on the cards and the script folded as expected. The BCCI working committee on Friday extended Ravi Shastri's tenure as Team India director till the end of the 2015 ICC World Cup in Australia and New Zealand. Shastri was appointed as director for the ODI series in England last month. The BCCI working committee agreed to extend Shastri's contract after the former Indian all-rounder agreed to continue in his new role in spite of being a busy mediaman. BCCI also decided to extend the contract of the support staff of Sanjay Bangar, Bharat Arun and MV Sridhar. The troika was also first appointed for the ODI series in England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X