For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஃபீஃபா உலகக் கோப்பை: ரசிகர்களுக்கு சிவப்பு விளக்கு பகுதி பெண்களின் அதிரடி சலுகை

By Siva
Brazilian women turning to prostitution for World Cup
ரியோடி ஜெனிரோ: ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தையொட்டி பிரேசலின் சிவப்பு விளக்கு பகுதி பெண்கள் கால்பந்தாட்ட ரசிகர்களுக்காக சிறப்பு சலுககைளை அறிவித்துள்ளனர்.

பிரேசிலில் ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் இன்று துவங்குகிறது. இந்த போட்டிகளில் 32 நாட்டு அணிகள் மோதுகின்றன. போட்டிகளை காண கால்பந்தாட்ட ரசிகர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து பிரேசிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் கால்பந்தாட்டத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகரில் உள்ள விலா மிமோஸா நகரில் இருக்கும் சிவப்பு விளக்கு பகுதியைச் சேர்ந்த 4,000 பெண்கள் 'அந்த' சேவை செய்ய தயாராகிவிட்டனர். இங்கிலாந்து போன்ற தூர தேசங்களில் இருந்து வரும் ரசிகர்களுக்காக அவர்கள் சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளனர்.

அறை மணிநேரம் உறவு கொள்ள அவர்கள் வெறும் ரூ. 1, 594 மட்டுமே கேட்கின்றனர். உலகக் கோப்பை போட்டிகளை முன்னிட்டு அந்த பெண்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டு ஒரு மணிநேரத்திற்கு ரூ. 2 ஆயிரத்து 655 வாங்குகிறார்கள்.

பிரசேலில் உள்ள பிரபலமான மராகானா ஸ்டேடியம் மற்றும் கோபகபானா கடற்கரையில் இருந்து 6 மைல் தொலைவில் தான் நாட்டிலேயே மிகப்பெரிய அளவில் விபச்சாரம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான டாட்டியான் கூறுகையில்,

நான் ஒவ்வொரு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 3 மணி முதல் மறுநாள் காலை 9 மணிவரை இந்த தொழிலை செய்கிறேன். ஒரு இரவில் 15 முதல் 20 பேரை பார்க்கிறேன். என் கணவருக்கு நான் இந்த தொழில் செய்வது தெரியாது. அவர் நான் உயர்தர பார் மேனேஜராக உள்ளேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இது தெரிந்தால் என்னை கொன்றுவிடுவார். ஆனால் எனக்கு இந்த தொழில் மிகவும் பிடித்துள்ளது. பணம் எளிதில் கிடைக்கும். உலகக் கோப்பையை பார்க்க வருபவர்களிடம் இருந்து நான் ரூ. 9 லட்சத்து 96 ஆயிரத்து 919 சம்பாதித்துவிடுவேன் என்றார்.

Story first published: Thursday, June 12, 2014, 12:27 [IST]
Other articles published on Jun 12, 2014
English summary
Red light area girls in Brazil have announced special offers to football fans who have come all the way to their nation to watch FIFA world cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X