For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒஸ்னியாக்கிடம் சிக்கி விழி பிதுங்கிய "சச்சின் புகழ்" ஷரபோவா... "அவுட்"!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரவிலிருந்து ரஷ்யாவின் மரியா ஷரபோவா வெளியேற்றப்பட்டு விட்டார். அவரை கரோலின் ஒஸ்னியாக்கி அபாரமாக வீழ்த்தி வெளியேற்றினார்.

இதன் மூலம் மகளிர் பிரிவில் டாப் 8 வீராங்கனைகளில் தற்போது இரண்டு பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். மற்றவர்கள் வெளியேறி விட்டனர்.

2006 அமெரிக்க ஓபன் சாம்பியனான மரியாவை, டென்மார்க் வீராங்கனை ஒஸ்னியாக்கி, 6-4, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அனுப்பி வைத்தார். இதன் மூலம் ஒஸ்னியாக்கி காலிறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

2வது பட்டக் கனவு தகர்ந்தது

2வது பட்டக் கனவு தகர்ந்தது

கடந்த ஜூன் மாதம்தான் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றிருந்தார் மரியா. இந்த பட்டத்தையும் தட்டிச் செல்லஆர்வமாக இருந்தார். ஆனால் அதில் மண்ணைப் போட்டு விட்டார் ஒஸ்னியாக்கி. இப்போட்டியில் 43 தேவையில்லாத தவறுகளையும், 8 டபுள் பால்ட்டுகளையும் செய்தார் மரியா.

வெயிலில் வாடிப் போன மரியா

வெயிலில் வாடிப் போன மரியா

மேலும் கடுமையான வெயிலும் மரியாவை சோர்வடைய வைத்து விட்டது. அவர் மட்டுமல்லாமல் அனைத்து வீரர் வீராங்கனைகளுமே கடும் வெயிலில் ஆடி வருகின்றனர். மரியா - ஒஸ்னியாக்கி போட்டியின்போதும் கூட இடை இடையே பிரேக் விடப்பட்டது.

லக்கி ஒஸ்னியாக்கி

லக்கி ஒஸ்னியாக்கி

ஒஸ்னியாக்கி 2010 தொடரில் அரை இறுதி வரை முன்னேறியவர். 2011 போட்டியிலும் அவர் அரை இறுதி வரை வந்தார். ஆனால் கடந்த 2 வருடமாக அவர் சுற்றுப் போட்டிகளுடன் வெளியேறி விட்டார். இந்த முறை காலிறுதிக்கு வந்துள்ளார்.

செரீனாவும், பொச்சார்டும்

செரீனாவும், பொச்சார்டும்

தற்போது மரியாவும் வெளியேறி விட்டதால் டாப் 8 வீராங்கனைகளில் நடப்புச் சாம்பியன் நம்பர் ஒன் செரீனா வில்லியம்ஸும், 7வது ரேங்க் வீராங்கனை கனடாவின் யூஜின் பொச்சார்டும் மட்டுமே டாப் ரேங்க் வீராங்கனைகளாக களத்தில் உள்ளனர்.

சானியா மிர்ஸா முன்னேற்றம்

சானியா மிர்ஸா முன்னேற்றம்

v

லியாண்டரும் முன்னேற்றம்

லியாண்டரும் முன்னேற்றம்

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் காரா பிளாக் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இவர்கள் ரஷ்யாவின் அல்லா குத்ரியெவட்சேவா மற்றும் பாகிஸ்தானின் அய்சம் உல் ஹக் ஜோடியை 6-1, 4-6, 10-4 என்ற கடினமான செட் கணக்கில் தோற்கடித்து 3வது சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

Story first published: Monday, September 1, 2014, 14:08 [IST]
Other articles published on Sep 1, 2014
English summary
Maria Sharapova was knocked out of the US Open by Caroline Wozniacki on Sunday, leaving the women's draw with just two of its top eight seeds while Roger Federer made the most of heavy rain to make the last-16. Five-time Grand Slam champion Sharapova -- the 2006 title winner in New York -- was defeated by Danish 10th seed Wozniacki with the 2009 runner-up claiming a deserved 6-4, 2-6, 6-2 triumph on a steamy Arthur Ashe Stadium court to reach the quarter-finals.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X