For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 பந்து மிச்சம் வச்சு ... "நச்"சுன்னு தப்பிப் பிழைத்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

மொஹாலி: டேவிட் மில்லர் மற்றும் அக்ஷார் படேலின் அதிரடி ஆட்டம் காரணமாக கஷ்டமான ஸ்கோரை சற்று டென்ஷனாகவே துரத்தி, சாம்பியன்ஸ் லீக் டிவென்டி 20 தொடரில் தனது 2வது வெற்றியைப் பெற்றுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

வழக்கமாக பஞ்சாப் அணிக்கு அதிரிடியாக ரன்களைக் குவித்து வெற்றி தேடித் தரும் மேக்ஸ்வெல் நேற்றைய போட்டியில் கை கொடுக்கவில்லை. மாறாக பந்து வீச்சாளர் பர்வீந்தர் அவானாவும், டேவிட் மில்லர் மற்றும் படேலும் சிறப்பாக ஆடி அணியை கரை சேர்த்துள்ளனர்.

முன்னதாக முதலில் ஆடிய பார்படாஸ் டிரைடென்ட் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் என்ற சவாலானை ரன் குவிப்பை ஏற்படுத்தியது. இதை சற்று தெம்பாகவே துரத்தி வந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சில முக்கிய விக்கெட்கள் விழுந்ததால் இடையில் தடுமாறியது. ஆனால் கடைசியில் டேவிட் மில்லரும், அக்ஷார் படேலும் போராடி வெற்றிக்கு இட்டுச் சென்று விட்டனர்.

நெருக்கடியில் ரன் குவித்த மில்லர்

நெருக்கடியில் ரன் குவித்த மில்லர்

டேவிட் மில்லர் அணி நெருக்கடியான நிலையில் இருந்தபோது அதை பொருட்படுத்தாமல் தனது பாணியில் அதிரடியாக ஆடியதால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற முடிந்தது. அவர் 34 பந்துகளில் 46 ரன்களைக் குவித்தார்.

கடைசி 2 ஓவர்களில் பதட்டம்

கடைசி 2 ஓவர்களில் பதட்டம்

கடைசி 2 ஓவர்கள் பஞ்சாப் அணிக்கு பதட்டமானதாக மாறிப் போனது. 12 பந்துகளில் 25 ரன்களை எடுக்க வேண்டிய நிலை. அதை மில்லரும், படேலும் திறம்பட சமாளித்தனர்.

படேல் 23

படேல் 23

யாரும் எதிர்பாராத வகையில் படேல் சிறப்பாக ஆடினார். பவுண்டரிகளை அவர் விளாசியதால் டென்ஷன் குறைந்து பஞ்சாபியர்களின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அவர் 23 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரும் மில்லரும் இணைந்து 19 பந்துகளில் 47 ரன்களைக் குவித்தனர்.

ஷேவாக் -மனான் வோரா

ஷேவாக் -மனான் வோரா

முன்னதாக ஷேவாக்கும், மனான் வோராவும் இணைந்து சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். ஷேவாக் 31 ரன்களையும், வோரா 27 ரன்களையும் எடுத்தனர். இருவரும் இணைந்து 22 பந்துகளில் 41 ரன்களைக் குவித்தனர்.

வில்லனாக வந்த ராம்பால்

வில்லனாக வந்த ராம்பால்

ஆனால் நான்காவது ஓவரில் இந்த ஜோடியை ரவி ராம்பாலின் பந்து வீச்சு பிரித்தது. வோரா அவுட்டனார்.

சாஹாவுடன் ஷேவாக்

சாஹாவுடன் ஷேவாக்

அதன் பின்னர் வீரேந்திர ஷேவாக்கும், விருத்திமான் சாஹாவும் இணைந்து 35 ரன்களைச் சேர்த்தனர். அதில் சாஹாவை ஜேம்ஸ் பிராங்க்ளின் பிரித்தார்.

பாதியில் போன மேக்ஸ்வெல்

பாதியில் போன மேக்ஸ்வெல்

பின்னர் அதிரடி வீரர் கிளன் மேக்ஸ்வெல் ஷேவாக்குடன் இணைந்தார். ஆனால் மேக்ஸ்வெல்லால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. 16 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

12வது ஓவரில் விடை பெற்ற ஷேவாக்

12வது ஓவரில் விடை பெற்ற ஷேவாக்

மறுபக்கம் நிதானமாக ஆடி வந்த ஷேவாக் 12வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஏமாற்றிய பெய்லி

ஏமாற்றிய பெய்லி

இந்த நிலையில் கேப்டன் பெய்லியும் ஏமாற்றி விட்டார். அவர் போனதும் அணி தடுமாற்றத்தைச் சந்தித்தது. 131 ரன்களுக்கு 6 விக்கெட்கள் போயிருந்தன. ஓவர்களும் 16.3 என்ற அபாயகர நிலையில் இருந்தது.

மில்லர் - படேலின் தாண்டவம்

மில்லர் - படேலின் தாண்டவம்

இந்த சமயத்தில்தான் டேவிட் மில்லர் அதிரடி அவதாரத்தை எடுத்தார். சிறப்பாக ஆடிய அவர் ரன் குவிக்க ஆரம்பித்தார். ஆனாலும் கடைசி 2 ஓவர்களில் 25 ரன்கள் தேவை என்ற நிலை.

படேல் பிரமாதம்

படேல் பிரமாதம்

இந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத வகையில் அக்ஷார் படேல் அதிரடியாக ஆடினார். 19வது ஓவரில் அவர் 3 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசி நெருக்கடியைக் குறைத்து வெற்றியை உறுதிப்படுத்தினார். 19வது ஓவரில் மட்டும் பஞ்சாப் அணி 20 ரன்களைக் குவித்தது.

கடைசி ஓவரில் ஜில் ஜில் சிக்ஸ்

கடைசி ஓவரில் ஜில் ஜில் சிக்ஸ்

கடைசி ஓவரில் டேவிட் மில்லர் அழகான சிக்ஸரை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். 2 பந்துகள் மிச்சமிருந்த நிலையில் பஞ்சாப் அணி வெற்றியைப் பெற்றது.

Story first published: Sunday, September 21, 2014, 13:37 [IST]
Other articles published on Sep 21, 2014
English summary
David Miller smashed a 34-ball 46 under pressure and Parvinder Awana scalped three wickets as Kings XI Punjab notched up a four-wicket victory over Barbados Trident in the Champions League Twenty20 here on Saturday. Put into bat, Barbados posted a challenging 174 for six, riding on twin half-centuries by Dilshan Munaweera (50) and Raymon Reifer (60) in their stipulated 20 overs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X