For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பைனலுக்கு நுழைந்தது இந்தியா!!

By Mathi

டாக்கா: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்திய அணி.

வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.

டுபிளெசிஸ் அபாரம்

டுபிளெசிஸ் அபாரம்

தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீரர் டி காக் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் அம்லா-டுபிளெசிஸ் ஜோடி அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர்.

அம்லா- டுபிளெசிஸ்

அம்லா- டுபிளெசிஸ்

16 பந்துகளில் 22 ரன்கள் அடித்த அம்லா, அஸ்வின் பந்தில் அவுட் ஆனார். 58 ரன்கள் விளாசிய டுபிளெசிஸ் விக்கெட்டையும் அஸ்வினே கைப்பற்றினார்.

பந்தாடிய டுமினி-மில்லர்

பந்தாடிய டுமினி-மில்லர்

அதேபோல் டுமினியும் மில்லரும் இந்திய பந்துவீச்சை நொறுக்க அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களைக் குவித்தது.

3 விக்கெட் வீழ்த்திய அஸ்வின்

3 விக்கெட் வீழ்த்திய அஸ்வின்

இந்தியா தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

173 ரன்கள் இலக்கு

173 ரன்கள் இலக்கு

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது இந்தியா.

ஆரம்பம் முதல் அமர்க்களம்

ஆரம்பம் முதல் அமர்க்களம்

இந்திய அணி தொடக்கமே முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித்தும், ரகானேவும் அபாரமாக விளையாடி நல்ல தொடக்கத்தை தந்தனர்.

ரோகித்-ரகானே ஜோடி

ரோகித்-ரகானே ஜோடி

ரோகித் 24 ரன்னிலும், ரகானே 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கோஹ்லியும் தென்னாப்பிரிக்கா பந்து வீச்சை அடித்து நொறுக்கினார்.

யுவராஜ் 18 ரன்கள்..

யுவராஜ் 18 ரன்கள்..

மறுமுனையில் நிதானமாக ஆடிய யுவராஜ்சிங் 18 ரன்னில் அவுட் ஆனார்.

கோஹ்லி களத்தில் நின்றதால் இந்திய அனியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அவருடன் இணைந்த ரெய்னாவும் அதிரடியில் ஈடுபட்டார்.

9 பந்தில் 21 எடுத்த ரெய்னா

9 பந்தில் 21 எடுத்த ரெய்னா

9 பந்துகளில் 21 ரன்களை குவித்த ரெய்னா இந்திய அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைபட்டபோது விக்கெட்டை இழந்தார்.

கடைசி பரபர ஓவர்கள்..

கடைசி பரபர ஓவர்கள்..

19-வது ஒவரின் 4-வது பந்தில் கோஹ்லி பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் ஒரு சிங்கிள் எடுத்தார். இதனால், வெற்றி ஷாட்டை கேப்டன் டோணி அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டோணி ரன் எடுக்கவில்லை.

6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

கடைசி ஓவரில் கோஹ்லி பவுண்டரி அடித்து இலக்கை எட்டினார். 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இலங்கையுடன் மோதல்

இலங்கையுடன் மோதல்

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவும், இலங்கையும் மோதுகின்றன.

Story first published: Saturday, April 5, 2014, 10:13 [IST]
Other articles published on Apr 5, 2014
English summary
Virat Kohli hit an imperious half-century to help India upstage South Africa by six wickets in the second semi-final in Dhaka on Friday to cruise into the World Twenty20 final.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X