For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாம்பியன்ஸ் லீக் டி20யில் இன்று.. தெ.ஆப்பிரிக்காவின் கேப்கோப்ராசுடன், நியூசிலாந்தின் நார்தன் அணி மோத

By Veera Kumar

ராய்ப்பூர்: சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் கேப் கோப்ராஸ் - நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணிகள் ராய்ப்பூரில் இன்று மோதவுள்ளன.

கேப்டன் ஜஸ்டின் ஆன்டாங் தலைமையின் கீழ், கேப் கோப்ராஸ் அணியும், டேனியல் பிளைன் தலைமையின் கீழ் நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணியும் களாமிறங்கவுள்ளன. இதில் கேப் கோப்ராஸ் தென் ஆப்பிரிக்காவையும், நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் நியூசிலாந்தையும் சேர்ந்த உள்ளூர் அணிகளாகும். கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக கேப் கோப்ராஸ் பார்க்கப்படுகிறது. அதே நேரம் நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணி தகுதி சுற்று போட்டி எதிலுமே தோற்காமல் வெற்றியை வசப்படுத்திய அணி. எனவே இரு அணிகளும் மோதும் போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Clt20: Cape Cobras will meet Northern Knights at today

கேப் கோப்ராஸ் அணியில் அம்லா, பீட்டர்சன், ஜஸ்டின் கெம்ப், ரிச்சர்ட் லெவி போன்ற நட்சத்திர ஆட்டகாரர்கள் உள்ளனர். நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணியை எடுத்துக்கொண்டால் வில்லியம்சன், டிம் சவுதி, வாட்லிங் போன்ற இளம் வீரர்கள் உள்ளனர்.

இவ்விரு அணிகளும் மோதும் போட்டி இரவு 8 மணிக்கு ராய்ப்பூர் மைதானத்தில் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Story first published: Friday, September 19, 2014, 11:22 [IST]
Other articles published on Sep 19, 2014
English summary
A strong Cape Cobras side with plenty of international players take on a confident Northern Knights in the third match of the Champions League T20 2014 (CLT20) main stage. Abhijit Banare looks at some key clashes to watch out for.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X