For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வந்துருச்சு ஐபிஎல்... இந்த வாட்டி என்ன மாதிரியான ஊழல் நடக்கப் போகுதோ....??

அபுதாபி: மறுபடியும் ஐபிஎல் திருவிழா வந்து விட்டது... பொடிசுகளெல்லாம் டிவி பெட்டி முன்பு தவமாய் தவமிருந்து போட்டிகளைப் பார்த்து சிலாகிக்க தயாராகி விட்டார்கள்.

இன்றைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதவுள்ளன.

யார் ஜெயிப்பாங்க என்று பெட்டிங்குகள் ஒரு பக்கம் கிளம்பியுள்ள நிலையில் கடந்த ஆண்டு தொடரை பிக்ஸிங் ஊழல் உலுக்கியதைப் போல இந்த முறையும் ஏதாச்சும் கோக்குமாக்கு நடக்குமா என்ற பரபரப்பும் கூடவே பற்றிக் கொண்டுள்ளது.

பதறடித்த பிக்ஸிங் ஊழல்

பதறடித்த பிக்ஸிங் ஊழல்

6வது ஐபிஎல் தொடரை ஸ்பாட் பிக்ஸிங் ஊழல் முற்றிலும் சிதறடித்து விட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முழுமையாக பெயரைக் கெடுத்துக் கொண்டு விட்டன.

களங்கம் வந்தாலும் கவர்ச்சி குறையலேயே

களங்கம் வந்தாலும் கவர்ச்சி குறையலேயே

ஆனால் அப்படி பெரும் ஊழல் தலைவிரித்தாடிய போதும், 7வது ஐபிஎல் தொடர் மீதான கவர்ச்சி இன்னும் குறையவில்லை. ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் அப்படியேதான் இருக்கிறது.

தடை களைந்த சென்னை, ராஜஸ்தான்

தடை களைந்த சென்னை, ராஜஸ்தான்

முதலில் இந்தத் தொடரில் கலந்து கொள்ள ராஜஸ்தானுக்கும், சென்னைக்கும் சுப்ரீம் கோர்ட் அனுமதி தரவில்லை. பின்னர் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று அனுமதி கிடைத்தது.

நஷ்டமாகி நாசமாப் போயிரும் யுவர் ஆனர்

நஷ்டமாகி நாசமாப் போயிரும் யுவர் ஆனர்

இரு அணிகளும் பங்கேற்காவிட்டால், பெரும் நஷ்டமாகிப் போய் விடும் என்று கிரிக்கெட் வாரியம் கத்திக் கதறியதால் அவர்களை அனுமதித்துள்ளது சுப்ரீம் கோர்ட்.

கோலாகல திருவிழா

கோலாகல திருவிழா

இப்படி எடுத்த எடுப்பிலேயே கிளம்பிய தடைகளைத் தாண்டி ஒரு வழியாக கோலாகலமான விருந்துடன் ஆரம்பித்துள்ளது ஐபிஎல் திருவிழா.

ரசிகர்கள் ஏக ஆர்வம்

ரசிகர்கள் ஏக ஆர்வம்

ரசிகர்களிடையே 7வது ஐபிஎல் தொடர் வழக்கம் போல பெரும் ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது. எங்கு பார்த்தாலும் ஐபிஎல் பேச்சுக்களாக உள்ளது. குறிப்பாக சிறார்கள் மத்தியில்தான் அதிக ஆர்வம்.

அப்பா அந்த சானல் தெரியலையேப்பா...

அப்பா அந்த சானல் தெரியலையேப்பா...

போட்டிகளை ஒளிபரப்பும் செட்மாக்ஸ் டிவி சானல் தெரியவில்லை, மொதல்ல அதுக்கு காசு கட்டப்பா என்று கத்திக் கவலைப்படும் சுள்ளான்களின் சத்தம் காதுகளைப் பிளக்கத்தான் செய்கிறது.

அபுதாபியில் முதல் போட்டி

அபுதாபியில் முதல் போட்டி

இன்று அபுதாபியில் முதல் போட்டி நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸும், கொல்கத்தாவும் மோதவுள்ளன. பெரும் எதிர்பார்ப்பை இப்போட்டி ஏற்படுத்தியுள்ளது.

முதல் ரவுண்டு எமிரேட்ஸில்

முதல் ரவுண்டு எமிரேட்ஸில்

முதல் சுற்று ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. அதாவது ஏப்ரல் 17ம் தேதி 30ம் தேதி வரை இங்கு நடைபெறுகிறது.

2வது ரவுண்டு இந்தியாவில்

2வது ரவுண்டு இந்தியாவில்

2வது சுற்றுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும். அதாவது மே 2ம் தேதி முதல் இறுதிப் போட்டி வரை இந்தியாவில் நடைபெறும்.

எல்லாத்தையும் உத்துப் பாருங்கப்பா நல்லா

எல்லாத்தையும் உத்துப் பாருங்கப்பா நல்லா

இந்தத் தொடரில் பிக்ஸிங் உள்ளிட்ட எந்தப் பிரச்சினையும் வந்து விடக் கூடாது என்பதில் கிரிக்கெட் வாரியமும், ஐபிஎல் நிர்வாகமும் உள்ளன. இதனால் ஒவ்வொரு போட்டியும் தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளன. ஐசிசியும் அந்த வேலையில் குதிக்கவுள்ளது.

ரசிகர் கூட்டத்துக்குப் பஞ்சமிருக்காது

ரசிகர் கூட்டத்துக்குப் பஞ்சமிருக்காது

எமிரேட்ஸில் போட்டிகள் நடந்தாலும் கூட ரசிகர் கூட்டத்திற்குப் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், அங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் நிறையவே இருப்பதால்.

மொத்தப் பரிசு ரூ. 30 கோடி

மொத்தப் பரிசு ரூ. 30 கோடி

இந்தத் தொடரின் மொத்தப் பரிசுத் தொகை ரூ. 30 கோடியாகும். சாம்பியன் ஆகும் அணிக்கு ரூ. 10 கோடி பரிசாகக் கிடைக்கும்.

யாரெல்லாம் விஐபி வீரர்கள்

யாரெல்லாம் விஐபி வீரர்கள்

இந்தத் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் யுவராஜ் சிங், ரூ. 14 கோடிக்கு விலை கொடுதது வாங்கப்பட்டுள்ளார். அவர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. 2வது பெரிய வீரர் டெல்லியின் திணேஷ் கார்த்திக். அதே அணியின் கெவின் பீ்ட்டர்சன் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.

கெயில் புயல் வீசுமா

கெயில் புயல் வீசுமா

வழக்கம் போல பெங்களூரின் கிறிஸ் கெய்ல் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதேபோல மேலும் பல வீரர்கள் கவனிப்புக்குரியவர்களாக உள்ளனர்.

பஞ்சாயத்து இல்லாமல் முடிந்தால் சரி

பஞ்சாயத்து இல்லாமல் முடிந்தால் சரி

ரசிகர்களிடையே இப்படி விறுவிறுப்பான எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தொடரை முடிக்க ஐபிஎல்லும், கவாஸ்கர் தலைமையிலான புதிய கிரிக்கெட் வாரிய நிர்வாகமும் டென்ஷனுடன் உள்ளன.

Story first published: Wednesday, April 16, 2014, 13:17 [IST]
Other articles published on Apr 16, 2014
English summary
Fighting for credibility after being left devastated by a spot-fixing scandal, the glamorous but controversial Indian Premier League will roll out its seventh edition here from Wednesday with the promise of putting cricket first while keeping the drama and glitz to a bare minimum. Defending champions Mumbai Indians, captained by Rohit Sharma, will square off against 2012 winners Kolkata Knight Riders, led by veteran opener Gautam Gambhir, in the event-opener at the Sheikh Zayed Stadium here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X