For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் எதிரிக்கு கூட இங்கிலாந்து கேப்டன் நிலைமை வரக்கூடாது: பீட்டர்சன் நையாண்டி

By Veera Kumar

லண்டன்: அரசியல் காரணமாகவே இங்கிலாந்து அணியின் கேப்டனாக அலைஸ்டர் குக் தொடர முடிகிறது என்ற பகீர் குற்றச்சாட்டைஇங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன் தெரிவித்தார். அதுமட்டுமின்றி எனது எதிர்க்கும் வரக்கூடாது என்று நினைக்கும் இன்னலில் குக் சிக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. டிரென்ட் பிரிட்ஜில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி, டிரா ஆன நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது. இரு போட்டிகளிலுமே அணியின் கேப்டன் குக் சரியாக பேட்டிங் செய்யவில்லை. சொற்ப ரன்களிலேயே விக்கெட்டை பறிகொடுத்தார்.

குக் ஆட்டம் தள்ளாடுகிறது

குக் ஆட்டம் தள்ளாடுகிறது

குக், இதற்கு முன்பு நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சோபிக்கவில்லை. பார்மில் இல்லாத குக், கேப்டன்ஷிப்பிலும் கோட்டைவிட்டு வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கே.பி.பீட்டர்சன் அந்த நாட்டு ஆங்கில பத்திரிகையொன்றில் எழுதியுள்ள கட்டுரையில் குக்கை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அரசியல்

அரசியல்

குக் கேப்டனாக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அரசியல்தான். ஆனால் அவர் ரன் அடித்து இங்கிலாந்து அணிக்கு உதவ வேண்டிய நிலையில் இருக்கிறார் என்பதால் முக்கியமான முடிவை எடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தயங்க கூடாது.

தூங்க முடியாது

தூங்க முடியாது

எனது எதிரிக்கும் ஏற்படக்கூடாது என்று நான் விரும்பும் அளவுக்கான, இன்னல் மிக்க காலகட்டத்தில் குக் மாட்டிக்கொண்டுள்ளார். குக்கால் இரவு நிம்மதியாக தூங்க முடியாது என்று நினைக்கிறேன், காலையில் எழுந்ததுமே, அவருக்கு தனது நிலைதான் நினைவுக்கு வரும்.

ராஜினாமா செய்யுங்களேன்..

ராஜினாமா செய்யுங்களேன்..

அதே நேரம், இங்கிலாந்துக்கு எது நல்லதோ அதைச் செய்ய குக் முன்வர வேண்டும். தனது கேப்டன் பதவியை குக் ராஜினாமா செய்வதுதான் சரியான முடிவாக இருக்க முடியும். ஒரு அணியை வழிநடத்தும் அளவுக்கு புத்திசாலித்தனத்தை குக் காண்பிக்க வில்லை. இவ்வாறு பீட்டர்சன் தெரிவித்துள்ளார். அணி நிர்வாகத்துடன் எப்போதும் உரசிக்கொண்டிருந்ததால், அதிரடி பேட்ஸ்மேன் என்றும் பார்க்காமல் பீட்டர்சனை, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கழற்றி விட்டது. இதன் காரணமாக இவ்வாறு வெறுப்பை உமிழ்ந்துள்ளார் என்று இங்கிலாந்து மூத்த கிரிக்கெட் வீரர்கள் கூறுகிறார்கள்.

Story first published: Saturday, July 26, 2014, 17:09 [IST]
Other articles published on Jul 26, 2014
English summary
Alastair Cook has managed to hold on to England captaincy solely because of "politics", says maverick batsman Kevin Pietersen and insists that the disaster which the skipper is enduring in the series against India is something that he would not wish even for his worst enemy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X