For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு என்னை கேப்டனாக்கியது சிறந்த முடிவு- அப்ரிடி சொல்கிறார்

By Veera Kumar

கராச்சி: என்னை டி20 அணியின் கேப்டனாக இரண்டு ஆண்டுகளுக்கு நியமித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்த மிகச் சிறந்த முடிவாகும் என்று சாகித் அப்ரிடி தெரிவித்தார்.

டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சாகித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். 2016ம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டித் தொடர் வரை அவரே கேப்டனாக தொடருவார் என்று இரு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

வீரர்களிடம் பதிவாகும்

வீரர்களிடம் பதிவாகும்

இதுகுறதி்து கருத்து தெரிவித்துள்ள அப்ரிடி, உலக கோப்பை முடியும் வரைக்கும் நான்தான் கேப்டன் என்று தெளிவாக வாரியம் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலமாக, அடுத்த இரு ஆண்டுகளுக்கு நான்தான் தலைவர் என்ற எண்ணம் அணி வீரர்களுக்கு அழுத்தமாக பதிவாகியிருக்கும்.

கேப்டனை மாற்றினால் கஷ்டம்

கேப்டனை மாற்றினால் கஷ்டம்

என்னை கேப்டனாக தேர்ந்தெடுத்து கிரிக்கெட் வாரியம் சிறப்பான முடிவை எடுத்துள்ளது. கேப்டன்களை அடிக்கடி மாற்றினால் மற்றொரு வீரர் கேப்டன் பதவிக்கான போட்டியில் உள்ளார் என்பதுதான் அர்த்தமாகும். இதனால் வீரர்களுக்குள் இணக்கம் இல்லாத சூழ்நிலை நிலவும். இப்போது அதுபோல ஏற்படாது.

ஆட்டம்தான் முக்கியம், வெற்றியல்ல

ஆட்டம்தான் முக்கியம், வெற்றியல்ல

நான் ஒழுங்காக விளையாடாமல் சக வீரர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது என்பதை உணர்ந்துள்ளேன். எனவே எனது முழு ஆட்டத்திறனையும் வெளிக் கொண்டுவருவேன். என்னை பொறுத்தளவில் மைதானத்தில் முழு அர்ப்பணிப்போடு விளையாடுவதோடு நமது கடமை முடிந்தது. வெற்றி தோல்வி குறித்து கவலைப்பட்டு ஆட்டத்தில் கோட்டைவிடக்கூடாது. சிறப்பாக ஆடி தோற்றாலும் கூட ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களை புகழத்தான் செய்வார்கள்.

மிஸ்பாவுக்கு ஒத்துழைப்பு

மிஸ்பாவுக்கு ஒத்துழைப்பு

ஒருநாள் போட்டிகளுக்கான அணி தலைவராக உள்ள மிஸ்பா-உல்-ஹக்கிற்கு நான் முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறேன். இனிமேலும் அதுபோன்ற ஒத்துழைப்பை அளிப்பேன். ஒரு போட்டித் தொடரில் சிறப்பாக ஆடாவிட்டால் உடனே கேப்டனை மாற்றும் போக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கைவிடுவது அணிக்கு நல்லது". இவ்வாறு சாகித் அப்ரிடி தெரிவித்தார்.

Story first published: Thursday, September 18, 2014, 13:28 [IST]
Other articles published on Sep 18, 2014
English summary
Newly appointed Pakistan twenty20 skipper Shahid Afridi has hailed the decision of the Pakistan Cricket Board (PCB) to appoint him as captain until the 2016 World T20 event.
 The outspoken and flamboyant allrounder said that making him captain until 2016 would ensure they were no problems within the team.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X