For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்டை ஏலத்தில் விட்டு கிடைத்த ரூ.1.5 கோடி பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு அளித்த சச்சின்

By Veera Kumar

புனே: தனது பேட், டை, டி-சட்டை போன்றவற்றை ஏலம் விட்டு கிடைத்த தொகையை அநாதை குழந்தைகளுக்கு அளித்துள்ளார், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். நிகழ்ச்சியின்போது குழந்தைகளுடன் கலந்துரையாடி, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

பேட், டை, டி-சட்டை

பேட், டை, டி-சட்டை

புனேயில் நடந்த ஏல நிகழ்ச்சியில் தன்னுடைய பேட், டை, மற்றும் டி-சட்டை ஆகியவற்றை ஏலத்தில் விட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர். அதில் கிடைக்கும் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு அளிக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ரூ.1.5 கோடி

ரூ.1.5 கோடி

இந்த ஏலத்தில் மொத்தம் ரூ.1.5 கோடி பணம் கிடைத்துள்ளது. இந்த பணத்தை NGO SOFOSH என்ற அநாதை குழந்தைகள் பராமரிப்பு அமைப்பிற்கு அளித்துள்ளார் சச்சின். இந்த நிகழ்ச்சியில், ஆதரவற்ற குழந்தைகள் சார்பில் சச்சின் குறித்து தயாரிக்கப்பட்ட ஆடியோ புத்தகம் வெளியிடப்பட்டது

அனைவரிடமும் திறமை உள்ளது

அனைவரிடமும் திறமை உள்ளது

நிகழ்ச்சியில் சச்சின் பேசுகையில் "உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுமே ஒரு திறமையுடன் படைக்கப்பட்டுள்ளான். நமது திறமைகளை நாம் கண்டு கொண்ட பிறகு அதை மெருகேற்றி ஜொலிக்க வைப்பது நமது கைகளில்தான் உள்ளது. திறமையை மதிக்க வேண்டும், ஆராதிக்க வேண்டும்.

ஆடியோ புத்தகம்

ஆடியோ புத்தகம்

ஏகப்பட்ட சவால்களை சந்திக்கும் கைவிடப்பட்ட குழந்தைகள், என்னைப் பற்றி ஒரு ஆடியோ புத்தகத்தை தயாரித்து அதை என்னிடம் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர். இது மிகவும் மன நிறைவை தருகிறது" என்றார்.

Story first published: Monday, September 22, 2014, 16:07 [IST]
Other articles published on Sep 22, 2014
English summary
Cricket icon Sachin Tendulkar's bat, tie and t-shirt were auctioned for Rs. 15 million on Sunday in bid to raise funds for orphan children in Pune.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X