For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணி நல்லவரு, வல்லவரு.. அருமையாக சொன்ன ஆட்ட நாயகன் ரெய்னா!

By Veera Kumar

டாக்கா: டோணி ஒரு நேர்மையான நல்ல வீரர் என்று ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி தோற்று தொடரை இழந்த நிலையில், 3வது போட்டியில் நேற்று 77 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகன் விருதை பெற்றார். டோணி, கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடி 69 ரன்களை குவித்தார்.

கோஹ்லி சதி

கோஹ்லி சதி

வங்கதேசத்துக்கு எதிரான முதல் இரு தோல்விகளை தொடர்ந்து, டோணியின் கேப்டன் திறமை மற்றும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு இந்திய அணியில் தரும் முக்கியத்துவம் போன்றவை விமர்சனங்களுக்கு உள்ளாகின. கோஹ்லி தலைமையில் டோணிக்கு எதிராக ஒரு சில வீரர்கள் இணைந்து வேண்டுமென்றே மோசமாக ஆடுவதாக கூறப்பட்டது.

ஜொலித்த சென்னை

ஜொலித்த சென்னை

இந்நிலையில், கடைசி போட்டியில் டோணி, அஸ்வின், ரெய்னா என சென்னை அணி வீரர்கள் ஜொலித்தனர். போட்டி தொடர் முடிந்துள்ள நிலையில் இன்று நிருபர்களிடம் ரெய்னா கூறியதாவது: டோணி ஒரு நேர்மையான நல்ல விளையாட்டு வீரர். ஒரு சீரிஸ் தோற்றதால், அவர் கெட்டவராகிவிடமாட்டார்.

மரியாத.. மரியாத..

மரியாத.. மரியாத..

இந்தியாவுக்காக பல கோப்பைகளை வென்று கொடுத்தவர் டோணி. அப்படிப்பட்ட கேப்டனை மரியாதை இல்லாமல் நடத்த கூடாது. நல்ல வீரராக மட்டுமின்றி நல்ல மனிதராக நடப்பவர் டோணி. டிரஸ்சிங் அறையில் அனைத்து வீரர்களுமே டோணியை விரும்புகிறோம். இன்னும் நீண்ட தூரம் டோணி பயணிக்க வேண்டியுள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம். இவ்வாறு ரெய்னா தெரிவித்தார்.

ஆட்ட நாயகன்

ஆட்ட நாயகன்

ரெய்னா நேற்றைய போட்டியில் அதிரடியாக 38 ரன்களை குவித்து, தள்ளாடிக்கொண்டிருந்த ரன் ரேட்டை எகிறச் செய்ததுடன், பவுலிங்கில் 3 விக்கெட்டுகளை சாய்த்து, டோணிக்கு தோளோடு தோள் கொடுத்து, மேன் ஆப்தி மேட்ச் விருதை தட்டிச் சென்றது நினைவிருக்கலாம்.

Story first published: Thursday, June 25, 2015, 14:32 [IST]
Other articles published on Jun 25, 2015
English summary
India batsman Suresh Raina has once again come out in support of his captain MS Dhoni calling him a "good honest man" and stating that one series loss can't make him "bad". After India's series loss to Bangladesh, Dhoni had come under heavy attack. However, some of his team-mates have stood behind the wicketkeeper-batsman.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X