For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"வாவ்".. 13 வயசு குட்டிப் பாப்பா பதக்கம் வென்று புதிய வரலாறு... காமன்வெல்த் போட்டியில்!

கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டியில் 13 வயதேயான ஒரு சிறுமி நீச்சல் போட்டியில் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

இவருக்கு 100 மீட்டர் பிரஸ்டிரோக் பாரா ஸ்போர்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

காமன்வெல்த் போட்டியில் 13 வயது சிறுமி பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த எர்ராய்ட் டேவிஸ் என்ற இந்த சிறுமி புதிய வரலாறு படைத்துள்ளார்.

இளம் வீராங்கனை

இளம் வீராங்கனை

நடப்பு காமன்வெல்த் போட்டியில் எர்ராய்ட்தான் மிகவும் வயது குறைந்த வீராங்கனை ஆவார். தற்போது பதக்கம் வேறு வென்று இவ்வளவு இளம் வயதில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெயரும் இவருக்குக் கிடைத்துள்ளது.

நீ்ச்சல் இளவரசி

நீ்ச்சல் இளவரசி

100 மீட்டர் பிரஸ்டிரோக் பாரா ஸ்போர்ட் நீச்சல் போட்டியில்தான் வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார் எர்ராய்ட்.

1.21 நிமிடத்தில்

1.21 நிமிடத்தில்

போட்டி தூரத்தை ஒரு நிமிடம் 21.68 நிமிடங்களில் கடந்து வெண்கலத்தைத் தட்டிச் சென்றுள்ளார் எர்ராய்ட்.

நடக்க முடியாமல் சிரமப்பட்டவர்

நடக்க முடியாமல் சிரமப்பட்டவர்

எர்ராய்ட் 4 வயதாக இருந்தபோது சரியாக நடக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு நீச்சல் பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து நீச்சல் குளத்தில் இந்த குட்டிப் பாப்பாவை இறக்கி விட்டனர் பெற்றோர்.

6 வயதில் ஒரு மைல் தூரம்

6 வயதில் ஒரு மைல் தூரம்

தனது 6 வயதில் ஒரு மைல் தூரம் வரை நீந்தி சாதனை படைத்தாராம் எர்ராய்ட். பின்னர் அவருக்கு நீச்சல்தான் எல்லாமே என்றாகி விட்டது.

இதற்கு முன்பு

இதற்கு முன்பு

இதற்கு முன்பு 1974ம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த கிறைஸ்ட்சர்ச் காமன்வெல்த் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் ஜென்னி டைரல் என்பவர்தான் மிகவும் இளம் வயதில் பதக்கம் வென்றவர் என்ற சாதனையை வைத்துள்ளார். அப்போட்டியில் அவர் தங்கம் வென்றிருந்தார். அவரை விட எர்ராய்ட் 2 மாதம் வயதில் குறைந்தவர் ஆவார்.

Story first published: Monday, July 28, 2014, 15:57 [IST]
Other articles published on Jul 28, 2014
English summary
Scotland's Erraid Davies set a Commonwealth Games record on Sunday (July 27) in Glasgow. At 13, she is now the youngest to win a medal in CWG history. Erraid, who is the youngest athlete at CWG 2014 and Scotland's youngest ever competitor, won bronze in the women's 100 metres breaststroke Para-sport SB9 final in a time of 1 minute and 21.68 seconds at Tollcross International Swimming Centre.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X