For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காமன்வெல்த் போட்டியில் 'சேவ் காஸா' கையுறை அணிந்து வந்த மலேசிய சைக்கிள் பந்தய வீரரால் பரபரப்பு!!

By Mathi

கிளாஸ்கோ: ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை காப்பாற்றுங்கள் என்ற வாசகம் பொறித்த கையுறை அணிந்து வந்த மலேசிய சைக்கிள் பந்தய வீரரால் பரபரப்பு ஏற்பட்டது.

கிளாஸ்கோவில் 20வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மலேசியாவின் சைக்கிள் பந்தய வீரர் அசிசுல்ஹஸ்னியும் கலந்து கொண்டார்.

CWG 2014: Malaysian cyclist reprimanded for Gaza protest

அவர் அணிந்திருந்த கையுறையில் 'சேவ் காஸா" என்ற முழக்கம் இடம்பெற்றிருந்தது. இதற்கு காமன்வெல்த் போட்டி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இப்படிப்பட்ட கையுறைகளை அணிந்து போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் அவரை எச்சரித்தனர். இருப்பினும் அவர் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அசிசுல்ஹஸ்னி, தாம் ஒரு மனிதாபிமான அடிப்படையில்தான் அப்படியான ஒரு கையுறையை அணிந்திருந்தேன். அது ஒன்றும் அரசியல் செயல்பாடு அல்ல என்றார்.

Story first published: Saturday, July 26, 2014, 12:41 [IST]
Other articles published on Jul 26, 2014
English summary
A Malaysian cyclist at the Commonwealth Games who wore gloves with "Save Gaza" written on them has been reprimanded by his team and warned he will be expelled if he does it again.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X