For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கழுத்தை பிடித்து தள்ளியபிறகும் 'கடமையாற்றும்' இந்திய அணியின் பீல்டிங், பந்து வீச்சு பயிற்சியாளர்கள்!

By Veera Kumar

லண்டன்: உங்க பயிற்சியே தேவையில்லை என்று கூறி கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக கூறியபிறகும், இந்திய கிரிக்கெட் அணிக்கான பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளர்கள் தொடர்ந்து பயிற்சியை மேற்பார்வையிட்டு வருகின்றனர். இதை பார்த்துவிட்டு இவர்கள் கடமை உணர்வுக்கு ஒரு அளவேயில்லையா என்ற முனகல்கள் கிளம்பிவருகின்றன.

ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு

ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு

இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரை படு கேவலமாக தோற்ற இந்திய அணியில் பல மாற்றங்களை கொண்டுவந்தது தேசிய கிரிக்கெட் வாரியம். இதன்படி பந்து வீச்சு பயிற்சியாளர் ஜோ டாவேஸ் மற்றும் களத்தடுப்பு (ஃபீல்டிங்) பயிற்சியாளர் திரேவோர் பென்னி ஆகியோருக்கு வரும் 25ம்தேதி தொடங்க உள்ள ஒரு நாள் போட்டித்தொடரில் ஓய்வளிக்கப்பட்டது.

பெயருக்கு ஒரு கோச்

பெயருக்கு ஒரு கோச்

ரவிசாஸ்திரி அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். சஞ்சய் பாங்கர், பாரத் அருண் ஆகியோர் உதவி கோச்சுகளாக நியமிக்கப்பட்டனர். அணியின் பயிற்சியாளர் டன்கன் பிளட்சர் மட்டும் பெயருக்கு மட்டுமே கோச்சாக தொடரச் செய்யப்பட்டுள்ளார்.

வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்கய்யா..

வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்கய்யா..

இந்நிலையில் இந்திய அணி ஒரு நாள் போட்டிகளுக்கு தயாராகிவருகிறது. இதற்கான வலைப்பயிற்சியில் நேற்று முதல் இந்திய அணி ஈடுபட்டு வருகிறது. இந்த பயிற்சியை ஜோ டாவேஸ் மற்றும் திரேவோர் பென்னி ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

மார்க்வாக்கே கோட்டைவிடுவாரே...

மார்க்வாக்கே கோட்டைவிடுவாரே...

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் குக் கொடுத்த கேட்சை, ஸ்லிப்பில் நின்ற ஜடேஜா கோட்டைவிட்டார். ஆனால் போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ஜோ டாவேஸ், உலகிலேயே தலை சிறந்த ஸ்லிப் களத்தடுப்பாளர் மார்க்வாக்தான். அவரே சில நேரங்களில் கேட்சை கோட்டை விட்டுள்ளார் என்று அலட்சியமாக தெரிவித்தார்.

சீராக்கிட்டாங்க...

சீராக்கிட்டாங்க...

இறுதி டெஸ்ட்டின்போது, திரேவோர் பென்னி நிருபர்களிடம் பேசுகையில், இளம் இந்திய அணி அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறது., ஸ்லிப் பீல்டிங் மட்டும் சரி செய்யப்பட வேண்டும். அதுவும் விரைவில் சீராகும் என்றார். ஆனால் அவர் கூறிய அடுத்த நாள் போட்டியின்போது இந்திய ஸ்லிப் வீரர்கள் இரு கேட்சுகளை கோட்டை விட்டனர்.

Story first published: Thursday, August 21, 2014, 12:30 [IST]
Other articles published on Aug 21, 2014
English summary
Two days ahead of their practice game versus Middlesex at Lord's, Team India regrouped with a net-session here with under-fire coach Duncan Fletcher and bowling coach Joe Dawes overseeing proceedings ahead of the five-match ODI series starting August 25. Interestingly Dawes has been rested for the ODIs after India's 3-1 Test loss against England with fielding coach Trevor Penney also been given a break.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X