For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யுவராஜ் அபார சதம் போட்டும்.. கலக்கலாக வென்ற சச்சின் அணி!

லண்டன்: ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் வீரர் யுவராஜ் சிங் அபாரமாக ஆடி சதம் போட்டது வீணாகி விட்டது. சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான எம்சிசி அணியின் ஆரோன் பின்ச் அதை விட அபாரமான சதத்தைப் போட்டதுடன், சச்சினுடன் இணைந்து சிறப்பாக ஆடி ரன் குவித்து விட்டதால் சச்சின் அணி வெற்றி பெற்றது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த ஒரு நாள் போட்டியில் சச்சின் தலைமையிலான மெரிலிபோன் கிரிக்கெட் கிளப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லார்ட்ஸ் மைதானத்தின் 200வது ஆண்டு விழாவையொட்டி இந்த காட்சிப் போட்டி நடந்தது. சச்சின் தலைமையில் எம்சிசி அணியும், ஷான் வார்னே தலைமையில் ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் அணியும் மோதின.

யுவராஜ் சிங் சூப்பர்

யுவராஜ் சிங் சூப்பர்

முதலில் ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் அணி ஆடியது. அந்த அணியின் யுவராஜ் சிங் அருமையாக ஆடி 132 ரன்களைக் குவித்தார். இதன் காரணமாக அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 294 ரன்களைச் சேர்த்தது.

பின்ச் அபாரம்

பின்ச் அபாரம்

ஆனால் அடுத்து வந்த எம்சிசி அணியின் ஆரோன் பின்ச் அபாரமாக ஆடினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் அவர் 181 ரன்களைக் குவித்தார்.

சச்சின் 44

சச்சின் 44

கேப்டன் சச்சின் டெண்டுல்கர் 44 ரன்களைச் சேர்த்தார். அவரும் பின்ச்சும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 107 ரன்களைக் குவித்து விட்டனர். இதனால் எம்சிசி அணியின் வெற்றி எளிதானது. 25 பந்துகளை மிச்சம் வைத்து 3 விக்கெட்களை மட்டுமே இழந்து எம்சிசி அணி வெற்றி பெற்றது.

வார்னே பந்து வீசவில்லை

வார்னே பந்து வீசவில்லை

அனைவரும் நேற்றைய போட்டியின்போது ஆவலுடன் எதிர்பார்த்தது ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் கேப்டன் ஷான் வார்னே, சச்சின், பிரையன் லாரா போன்றோருக்கு பந்து வீசப் போவதைத்தான். ஆனால் ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் பேட்டிங்கின்போது பிரெட் லீ பந்து வீச்சில் வார்னேவின் கை விரலில் காயம் ஏற்பட்டதால் அவர் பின்னர் பந்து வீசவில்லை.

1814 முதல்

1814 முதல்

வட மேற்கு லண்டனில் உள்ள செயின்ட் ஜான்ஸ் உட் நகரில்தான் லார்ஸ்ட் மைதானம் அமைந்துள்ளது. எம்.சி. சி கிளப் 1787ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 1814ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்திற்கு அது இடம் பெயர்ந்தது. அன்று முதல் லார்ட்ஸ் மைதானத்தில் போட்டிகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சினின் கடைசி லார்ட்ஸ் போட்டி

சச்சினின் கடைசி லார்ட்ஸ் போட்டி

நேற்று நடந்த போட்டிதான் சச்சின் டெண்டுல்கர் லார்ட்ஸ் மைதானத்தில் கடைசியாக கலந்து கொண்ட போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 6, 2014, 13:25 [IST]
Other articles published on Jul 6, 2014
English summary
Australia's Aaron Finch made a dashing 181 not out as MCC beat the Rest of the World by seven wickets in a one-day match celebrating the bicentenary of Lord's Cricket Ground on Saturday. Set 294 - a total powered by Yuvraj Singh's 132 - to win, MCC finished on 296 for three with 25 balls to spare. Australia one-day specialist Finch put on 107 for the first wicket with MCC captain Sachin Tendulkar (44) in what could be the retired India great's final appearance at Lord's.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X