For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணிக்கு வந்திருப்பது "இமாஜினேஷன்" பிரச்சினை.. கங்குலி சொல்கிறார்!

கொல்கத்தா: டெஸ்ட் கேப்டனாக டோணியிடம் புதுமையான எண்ணங்கள், கற்பனை வளம் இல்லை. அதை அவர் சரி செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் அவர் வெளிநாடுகளிலும் அணியை திறம்பட வழி நடத்த வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரில் நன்றாக அடி வாங்கி விட்டது. இதையடுத்து கவாஸ்கர் போன்ற கிரிக்கெட் நிபுணர்கள் விமர்சனமும், ஆராய்ச்சியையும் தொடர்ந்து வருகின்றனர். இந்த வரிசையில் இப்போது கங்குலியும் சேர்ந்துள்ளது.

இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன் யார் என்பதில் டோணிக்கும், கங்குலிக்கும் இடையே இன்று வரை போட்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டோணி குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியிலிருந்து...

சிறந்தவர்தான்...!

சிறந்தவர்தான்...!

நமது அணியைப் போலவே டோணியும் சிறந்தவர்தான், திறமை படைத்தவர்தான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவரது உத்திகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.

எனக்கு என்ன பயம்னா...!

எனக்கு என்ன பயம்னா...!

அடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியா வந்து விளைாடவுள்ளது. அதில் கூட பிரச்சினை இல்லை. நாம் சமாளித்து விடலாம். எனது பயணம், இந்தியா அடுத்த சில மாதங்களில் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய பயணத்தைப் பற்றித்தான்

நான்கு வருடமாகவே சரியில்லை

நான்கு வருடமாகவே சரியில்லை

டோணியின் ரெக்கார்ட் புத்தகத்தைப் பார்த்தால் கடந்த நான்கு வருடமாகவே அவர் சரியாக விளையாடவில்லை. அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு கடினமான சுற்றுப்பயணத்தை இந்தியா மேற்கொள்ளவுள்ளது.

இங்கிலாந்தை விட ஆஸ்திரேலியா மோசம்

இங்கிலாந்தை விட ஆஸ்திரேலியா மோசம்

இங்கிலாந்து தொடரை விட ஆஸ்திரேலியா தொடர் இன்னும் மோசமாகவே இருக்கும். எனவே அதற்குள் தனது கேப்டன்ஷிப்பின் தரத்தை உயர்த்திக் கொள்ள டோணி முயல வேண்டும்.

கற்பனை வளம் இல்லை

கற்பனை வளம் இல்லை

டோணியிடம் கற்பனை வளம் இல்லை. புதுமையான எண்ணங்கள் இல்லை. வெளிநாடுகளில் அவரது பேட்டிங் நன்றாக மாறியுள்ளது. ஆனால் கேப்டன் பொறுப்பு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

2015 வரை தொடரலாம்

2015 வரை தொடரலாம்

இருப்பினும் 2015 உலகக் கோப்பைத் தொடர் வரை டோணியே கேப்டனாக நீடிக்க வேண்டும் என்பது எனது கருத்து என்றார் கங்குலி.

Story first published: Thursday, August 21, 2014, 9:44 [IST]
Other articles published on Aug 21, 2014
English summary
When he led India with aplomb, Sourav Ganguly always said "he was as good as his team." Ganguly, now a well-respected critic of the game, led a team of legends and his out-of-the-box thinking and strategies made him one of the top captains in the game. Post India's 3-1 defeat in the recently-concluded Test series in England, Ganguly feels Mahendra Singh Dhoni has a lot of work to do to lead in the five-day format.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X