For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணியின் கேப்டன்ஷிப் டெஸ்ட் போட்டிக்கு லாயக்கில்லை: இங். முன்னாள் வீரர் மைக் பிரியர்லி

By Mathi

லண்டன்: டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன்ஷிப் டோணியிடம் இல்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக் பிரியர்லி கடுமையாக சாடியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடி தோற்றது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது.

இந்த தோல்வியால் கேப்டன் டோணி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் அவரது கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர்.

டோணியை நீக்குக

டோணியை நீக்குக

டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் சில வீரர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

நீக்க முடியாது- பிசிசிஐ

நீக்க முடியாது- பிசிசிஐ

ஆனால் கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் கூறியுள்ளார்.

உலகக் கோப்பைக்காக

உலகக் கோப்பைக்காக

உலக கோப்பை போட்டி தொடங்க இன்னும் 6 மாதம் உள்ளதால் டோணியை நீக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை.

பிரியர்லி விமர்சனம்

பிரியர்லி விமர்சனம்

இதனிடையே டோணியை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக் பிரியர்லி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தமது வலைப்பக்கத்தில் விரிவாக எழுதியுள்ளார்.

டோணி மோசம்

டோணி மோசம்

அதில், டோணியின் கேப்டன் பதவி டெஸ்ட் தரத்தில் இல்லை. அவரது விக்கெட் கீப்பிங்கும் மோசம்.

புஜாரா- கோஹ்லி

புஜாரா- கோஹ்லி

ஜடேஜா, பின்னி, அஸ்வினை முழுமையாக பயன்படுத்தியிருக்கலாம். புஜாராவும் கோஹ்லியும் படுமோசமாக சொதப்பினர். இந்திய அணியின் பேட்டிங் குறித்து வருத்தம்தான் தெரிவிக்க முடியும் என்றும் பிரியர்லி குறிப்பிட்டிருக்கிறார்.

Story first published: Thursday, August 21, 2014, 13:25 [IST]
Other articles published on Aug 21, 2014
English summary
Former England captain Mike Brearley, one of the sharpest cricketing minds to have played the game, reckons that Mahendra Singh Dhoni's captaincy and wicket-keeping is not up to Test standard.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X