For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணி கேப்டன்ஷிப் வெறுப்பேற்றுவதாக இருக்கு: சொல்வது கங்குலி

By Mathi

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் கேப்டன்ஷிப் வெறுப்பேற்றுவதாக இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சாடியுள்ளார்.

டோணி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் டோணி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

ganguly and dhoni

இந்நிலையில் டோணி குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், டோணியின் டெஸ்ட் கேப்டன்ஷிப் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. டெஸ்ட் அணியில் டோணி நீடிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஓராண்டுக்குள் உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இல்லையெனில் அவரை மாற்ற வேண்டும் என்று நானும் கோரியிருப்பேன் என்றார்.

இதேபோல் முன்னாள் கேப்டன் கவாஸ்கரும், டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து டோணியை நீக்க இது சரியான நேரம் என்று நான் நினைக்கவில்லை. டோணிக்கு இன்னும் வாய்ப்புகள் அளிக்கலாம் என்றார்.

மற்றொரு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டும், இன்னும் ஓராண்டுக்கு கேப்டனாக நீடிக்க டோணி தகுதியானவர் என்கிறார்.

Story first published: Thursday, February 20, 2014, 17:37 [IST]
Other articles published on Feb 20, 2014
English summary
Mahendra Singh Dhoni's Test captaincy is under fire and this time, from former India skipper Sourav Ganguly.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X