For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்டிங்கில் சொதப்பும் விராட் கோஹ்லிக்கு பயிற்சியாளராக மாறியுள்ள சச்சின் டெண்டுல்கர்

By Veera Kumar

மும்பை: பேட்டிங்கில் தடுமாறி வரும் விராட் கோஹ்லி, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரிடம் டிப்ஸ் பெற்று பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இளம் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி, தொடர் முழுவதுமே சொதப்பி தள்ளிவிட்டார். டெஸ்ட் போட்டியில் ரன் சராசரி 13.40-ஆகவும், ஒரு நாள் போட்டியில் ரன் சராசரி 18-ஆகவும் கோஹ்லிக்கு இருந்தது.

ரவி சாஸ்திரி கருத்து

ரவி சாஸ்திரி கருத்து

"ஒரே பந்து வீச்சாளர் வீசும், ஒரே வகை பந்து வீச்சில் ஐந்தாறு முறை அவுட் ஆனால், பேட்ஸ்மேனிடம் ஏதோ பிரச்சினை உள்ளது என்று பொருள்" என்று இந்திய அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்திருந்தார். ஆப்-ஸ்டம்பு அளவில் அல்லது ஆப்-ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி செல்லும் பந்துகளில் கோஹ்லி தொடர்ந்து அவுட் ஆனதை சாஸ்திரி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

சச்சினிடம் சரண்

சச்சினிடம் சரண்

இதையடுத்து மும்பையிலுள்ள கிரிக்கெட் சங்கத்தின் பயிற்சி மைதானத்தில் கடந்த சில நாட்களாக கோஹ்லி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தனது பிரச்சினையை சரி செய்ய கூடிய ஒரே நபர் சச்சின் டெண்டுல்கர்தான் என்பதை உணர்ந்துள்ள கோஹ்லி, அவரின் ஆலோசனைகளை பெற்று பயிற்சி எடுத்து வருகிறார்.

கூடவே இருந்து திருத்தும் சச்சின்

கூடவே இருந்து திருத்தும் சச்சின்

பேட்ஸ்மேன் நிற்கும் முறை உள்ளிட்ட பல டிப்சுகளை சச்சின் தருவதோடு, கோஹ்லியின் பேட்டிங் செய்யும் முறையையும் அருகில் இருந்து பார்த்து தவறு இருந்தால் திருத்தி வருகிறார் சச்சின்.

சமய சஞ்சீவினியாகும் சச்சின்

சமய சஞ்சீவினியாகும் சச்சின்

இதுதவிர, மும்பை அணியின் 23 வயதுக்குட்பட்ட பந்து வீச்சாளர்களை ஆப்-ஸ்டம்பு அளவில் பந்து வீசச் சொல்லி, பிசிசிஐயின் சிறப்பு பேட்டிங் கோச்சான லால்சந்த் ராஜ்புத், கோஹ்லிக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். இதற்கு முன்பும் பல பேட்ஸ்மேன்கள் சச்சின் டிப்ஸ்படி பேட்டிங் செய்து இழந்த பார்மை மீண்டும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, September 19, 2014, 16:25 [IST]
Other articles published on Sep 19, 2014
English summary
At least someone in the BCCI will be happy that Virat Kohli's team has not qualified for the Champions League T20. Reason being: it allows the young batsman to focus on his batting which failed so spectacularly in England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X