For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காதலிகளால் தடுமாறவில்லை நமது வீரர்கள்.. டிராவிட் வக்காலத்து!

மும்பை: இந்திய அணி ரன் குவிக்க தடுமாறுவதற்கு அவர்களது காதலிகளைக் குறை கூறிப் பயனில்லை. மாறாக, நமது ஒரு நாள் கிரிக்கெட்டே ஒரு இலக்கு இல்லாமல் போய்க் கொண்டிருப்பதுதான் இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என்று முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

தற்போதைய சூழலில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி முக்கியத்துவமே இல்லாத நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. மேலும் உயிர் தப்ப அது போராடிக் கொண்டிருக்கிறது என்றும் டிராவிட் கூறியுள்ளார்.

எனவே சாம்பியன்ஸ் டிராபி அல்லது உலகக் கோப்பைப் போட்டி போன்றவற்றை அதிக அளவில் நடத்த வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு வருகிறது என்றும் டிராவிட் கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த 6வது திலீப் சர்தேசாய் நினைவு உரையாற்றியபோது டிராவிட் இப்படிக் குறிப்பிட்டார். அவரது பேச்சிலிருந்து.....

சீரியஸ் நிலையில் ஒரு நாள் கிரிக்கெட்

சீரியஸ் நிலையில் ஒரு நாள் கிரிக்கெட்

ஒரு நாள் கிரிக்கெட் இன்று மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. அது உயிர் பிழைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது.

இலக்கே இல்லை

இலக்கே இல்லை

இலக்கு இல்லாமல், எந்தப் பாதையில் போகிறோம் என்று தெரியாமல் அது போராடிக் கொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் அது பொருத்தமற்ற ஒன்றாகவும் மாறி வருகிறது.

உலகக் கோப்பைப் போட்டிகள் அதிகம் தேவை

உலகக் கோப்பைப் போட்டிகள் அதிகம் தேவை

இதைக் காப்பாற்ற, ஒரு நாள் போட்டிகளை வீரியமுடன் வைத்திருக்க சாம்பியன்ஸ் டிராபி, உலகக் கோப்பைப் போட்டிகள் போன்றவற்றை அதிக அளவில் நடத்த வேண்டியது அவசியம்.

அர்த்தமற்ற போட்டிகள்

அர்த்தமற்ற போட்டிகள்

பல ஒரு நாள் போட்டிகள் அர்த்தமற்றதாக உல்ளன. அதிக அளவில் போட்டிகளில் ஆடுவதும் இன்னொரு பிரச்சினை.

கொஞ்சமா விளையாடுங்க

கொஞ்சமா விளையாடுங்க

அதிக அளவிலான ஒரு நாள் போட்டித் தொடர்களை நடத்துவதை விட குறைந்த அளவில் ஆடுவது நல்லது.

சுமையைத் தாங்க முடியாது

சுமையைத் தாங்க முடியாது

வருடத்திற்கு 10 மாதம் விதம் விதமான போட்டிகளில் ஆடினால், அந்த சுமையை வீரர்களாலும் தாங்கிக் கொள்ள முடியாது.

"சக்கிங்" குற்றமில்லை.. அது பழுதுதான்!

பந்து வீச்சாளர்களின் பந்தை எறிவதாக வரும் குற்றச்சாட்டுக்களை குற்றச் செயலாக கருத வேண்டியதில்லை. அது தொழில்நுட்பக் கோளாறுதான். அப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்குள்ளாகும் வீரர்களை குற்றவாளிகள் போல பார்க்கத் தேவையில்லை. அவை சரி செய்யக் கூடிய தவறுகள்தான்.

மனைவி - காதலிகள் தவறில்லை!

மனைவி - காதலிகள் தவறில்லை!

வெளிநாட்டுத் தொடர்களில் வீரர்களுடன் மனைவியர் அல்லது காதலியர் உடன் செல்வதில் தவறில்லை. அதை அனுமதிக்கலாம். அதைத் தடை செய்யத் தேவையில்லை.

போகாட்டிதான் பிரச்சினை

போகாட்டிதான் பிரச்சினை

ஒவ்வொரு வீரரும் சராசரியாக 10 முதல் 11 மாதம் வரை விளையாடுகிறார். இப்படிப்பட்ட சமயத்தில் நீண்ட காலம் கொண்ட வெளிநாட்டுத் தொடர்களில் அவர்களின் மனைவியர் அல்லது காதலியரும் கூடப் போவதுதான் நல்லது. போகாவிட்டால்தான் பிரச்சினை.

அவர்களைக் குறை சொல்லிப் பயன் இல்லை

அவர்களைக் குறை சொல்லிப் பயன் இல்லை

வீரர்களின் ஆட்டத் திறனையும், அவர்களது மனைவி, காதலியரையும் முடிச்சுப் போட்டுப் பார்ப்பது தவறு. அது சரியல்ல என்றார் டிராவிட்.

அப்பாடி "கோஹ்லி"க்கு ஒரு "சப்போர்ட்" குரல் கிடைச்சாச்சு...!

Story first published: Sunday, September 14, 2014, 13:27 [IST]
Other articles published on Sep 14, 2014
English summary
Former India captain Rahul Dravid today said of the three formats of the game, ODI cricket at present was largely irrelevant and struggling to survive and consequently there should be more tournaments like Champions Trophy or World Cup to give it a proper context. In the context of some Indian players being accompanied by wives and girlfriends during the Test series that they lost 1-3 to England, he said it should be allowed.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X