For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: ஐசிசியை விட்டு சீனிவாசன் ஒதுங்கிக் கொள்ள ஃபிகா கோரிக்கை

By Mathi

சிட்னி: இந்திய உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அனைத்து பணிகளிலும் இருந்தும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சீனிவாசனை ஒதுக்கி வைக்குமாறு ஐசிசிக்கு சர்வதேச கிரிக்கெட் அமைப்புகளின் கூட்டமைப்பு அதாவது கோரிக்கை விடுத்துள்ளது.

6வது ஐ.பி.எல். போட்டிகளின் போது பிக்ஸிங்கில் ஈடுபட்ட விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகியும் சீனிவாசனின் மருமகனுமாகிய குருநாத் மெய்யப்பன் உள்ளிட்டோர் சிக்கினர்.

FICA wants Srinivasan to stand aside from ICC duties

இது தொடர்பான முத்கல் கமிட்டி அறிக்கை மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், சீனிவாசனை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி கொள்ள கூறியது. அத்துடன் துணைத் தலைவர் சிவ்லால் நிர்வாகப் பொறுப்புகளை கவனிப்பார் என்றும் ஐபிஎல் காலத்துக்கு இடைக்கால தலைவராக கவாஸ்கர் இருப்பார் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து தற்போது சர்வதேச கிரிக்கெட் அமைப்புகளின் கூட்டமைப்பும் சீனிவாசன், பிக்ஸிங் விசாரணை முடிவடையும் வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

இதனால் ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை சீனிவாசன் ஏற்க முடியுமா என்பது சந்தேகமாகியுள்ளது.

Story first published: Tuesday, April 29, 2014, 14:36 [IST]
Other articles published on Apr 29, 2014
English summary
The Federation of International Cricketers' Associations (FICA) today called on the International Cricket Council (ICC) Board to direct BCCI chief N Srinivasan to stand aside from all ICC functions.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X