For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

உலக கோப்பை 'தங்க' விருதுகளை தட்டிச் செல்லும் வீரர்கள் யார்? பெயர் பட்டியல் ரெடி!

By Veera Kumar

ரியோடி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதியில்,சிறந்த விளையாட்டு வீரருக்கு தங்க பந்து, சிறந்த கீப்பருக்கு தங்க கையுறை விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இதற்கான போட்டியாளர்கள் பெயர் பட்டியலில் பிரேசிலின் நெய்மர், அர்ஜென்டினாவின் மெஸ்சி, ஜெர்மனியின் முல்லர் போன்றவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

பல பிரிவுகளில் பரிசுகள்

பல பிரிவுகளில் பரிசுகள்

உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 12ம்தேதி துவங்கி, இம்மாதம் 13ம்தேதிவரை நடைபெறுகிறது. இதில் பல பிரிவுகளின் கீழ் பரிசுகள் வழங்கப்படும். சிறப்பான கோல் கீப்பருக்கு தங்க கையுறை, அதிக கோல் போட்ட வீரர்களுக்கு தங்க காலணி என பல பரிசுகள் உண்டு. அதில் ஒன்றுதான் தங்க பந்து, விருது.

நாடுகள் அனுப்பிய பட்டியல்

நாடுகள் அனுப்பிய பட்டியல்

தங்க பந்து விருதை பெற இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு வீரர்களில் சிறப்பாக செயல்பட்டோரின் பெயர் பட்டியலை அனுப்புமாறு ஃபிஃபா கேட்டுக்கொண்டிருந்தது. இதையடுத்து பல நாட்டு கால்பந்தாட்ட சங்கங்களும் தங்கள் முன்னணி வீரர்கள் பெயர்களை அனுப்பியுள்ளன.

முத்தான 10 பேர்

முத்தான 10 பேர்

அதில் மொத்தம் 10 வீரர்கள் பெயர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வீரர்களில் சிறப்பாக செயல்பட்டவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டிக்கு பிறகு பரிசு வழங்கப்படும்.

ஜெர்மனியில் அதிகம்

ஜெர்மனியில் அதிகம்

ஜெர்மனியில் இருந்து தாமஸ் முல்லர், டோனி குரூஸ், மேட்ஸ் ஹும்மல்ஸ், பிலிப் லாம் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா 2வது

அர்ஜென்டினா 2வது

அர்ஜென்டினாவில் இருந்து, ஏஞ்சல் டி மரியா, சேவியர் மாஸ்கரனோ, லியோனல் மெஸ்சி ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பிரேசிலில் ஒருவர்தான்

பிரேசிலில் ஒருவர்தான்

பிரேசிலில் இருந்து நெய்மர், நெதர்லாந்தில் அர்ஜென் ரோபன், கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகுயஸ் ஆகியோர் பெயர்கள் 10 பேர்கொண்ட இறுதி பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இவர்களில் ஒழுக்கம், திறமை உள்ளிட்ட பல பிரிவுகளின்கீழ், வெற்றி வீரர் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும்.

சிறந்த கீப்பர் யார்?

சிறந்த கீப்பர் யார்?

சிறப்பாக கீப்பிங் செய்ததற்காக அளிக்கப்படும் தங்க கையுறை விருதுக்கு, கோஸ்டரிகா அணியின் கெய்லோர் நவாஸ், ஜெர்மனியின் மனுவேல் நேயுர், அர்ஜென்டினாவின் செர்ஜியோ வரானே ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுவருகின்றது.

இளம் சிங்கங்களுக்கும் விருது

இளம் சிங்கங்களுக்கும் விருது

சிறந்த இளம் வீரர்கள் விருதுக்கான பட்டியலில் நெதர்லாந்தின் மெபிஸ் டீபே, பிரான்ஸ் நாட்டின் பைர் பவுல் போக்பா மற்றும் ரபேல் வரானே ஆகியோர் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த விருதுக்கு தேர்வாக வேண்டுமானால் 1993, ஜனவரி 1ம்தேதிக்கு பிறகு பிறந்திருக்க வேண்டும் என்பது விதிமுறை.

Story first published: Saturday, July 12, 2014, 13:00 [IST]
Other articles published on Jul 12, 2014
English summary
Finalists Germany and Argentina have four and three players shortlisted respectively for the Golden Ball award given to the World Cup’s best player.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X