For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: நாளைய இறுதிப் போட்டியில் வென்று சரித்திரம் படைப்பாரா டோணி?

By Mathi

டாக்கா: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றால் 20 ஓவர் கோப்பையை இரண்டு முறை வென்ற பெருமை கேப்டன் டோணிக்கு சேரும்.

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்விகளை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது. இலங்கை அணியை நாளைய இறுதிப் போட்டியில் இந்தியா எதிர்கொள்கிறது.

History beckons India captain MS Dhoni at World T20 final

டோணி தலைமையிலான இந்திய அணி 2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. 2013-ல் சாம்பியன்ஸ் கோப்பையையும் டோணி கைப்பற்றிக் கொடுத்தார்.

தற்போது 20 ஓவர் உலகக் கோப்பையை டோணி வென்றால், 2 முறை இந்த கோப்பையை வென்ற பெருமைக்குரிய கேப்டனாவார் டோணி. நாளை சரித்திரம் படைப்பாரா டோணி?

Story first published: Saturday, April 5, 2014, 12:28 [IST]
Other articles published on Apr 5, 2014
English summary
India captain MS Dhoni can create history tomorrow by winning the ICC World Twenty20 title at the Sher-e-Bangla National Stadium.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X