For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பை ஹாக்கி: இந்தியா–இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

By Mathi

ஹாக்: உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் இன்று இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

13-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி நெதர்லாந்தில் உள்ள ஹாக்கில் நடந்து வருகிறது. வருகிற 15-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பெல்ஜியம், இந்தியா, ஸ்பெயின், மலேசியா ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் 3 முறை சாம்பியனான நெதர்லாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, தென் கொரியா, அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

Hockey World Cup: After heartbreak against Belgium, India face English Test

ஒவ்வொரு பிரிவிலும் இடம் பிடித்துள்ள அணிகள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

இந்த போட்டியின் 2-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி அணி 4-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.

3-வது நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் கடைசி நிமிட கோலால் 2-3 என்ற கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டது.

இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் 1-1 என்ற கணக்கில் டிரா கண்டு இருந்தது. இங்கிலாந்து அணி தாக்குதல் ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தக்கூடியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடந்த உலக லீக் இறுதிப்போட்டியில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு இருந்தது. அந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் பழிதீர்க்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Story first published: Monday, June 2, 2014, 9:06 [IST]
Other articles published on Jun 2, 2014
English summary
India will need to shake off the 'what if' feeling if they are to find their way back in the ongoing Hockey World Cup after the heart-breaking loss to Belgium. India is now up against England next at the Kyocera Stadium. England themselves had a disappointing draw against the doughty Spaniards in another match despite having many chances.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X