For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய வீரர்களிடம் "விளையாட" அழகிகள் ரெடி...!

டெல்லி: 2015ம் ஆண்டு உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய வீரர்களை மயங்கி தங்கள் பக்கம் சாய்க்க அழகிகள் முயற்சிக்கலாம் என்று நியூசிலாந்து போலீஸார் எச்சரித்துள்ளனர். அதில் சிக்கி விடாமல் இந்திய வீரர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த அழகிகளிடம் சிக்கினால் அந்த வீரர்களின் ஆட்டத்திறன் பாதிக்கப்படும் என்றால் போட்டிகளில் தங்களுக்குச் சாதகமான முடிவுகளை சாதிப்பதற்காக புக்கிகள் இந்த விளையாட்டில் ஈடுபடலாம் என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.

ரசிகைகள் என்ற போர்வையில் இத்தகைய அழகிகள் வீரர்களைக் குறி வைக்கலாம் என்றும் உலகக் கோப்பைப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வரும் நியூசிலாந்து காவல்துறை அதிகாரி சான்ட்ரா மேண்டர்சன் தெரிவித்துள்ளார்.

அழகிகளை இறக்கும் தாவூத் குரூப்

அழகிகளை இறக்கும் தாவூத் குரூப்

தாவூத் இப்ராகிம் தரப்பு பல அழகிகளை இதற்காகப் பயன்படுத்தலாம் என்று ஐசிசிக்கு சான்ட்ரா சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளளது.

ஆட்டோகிராப் வித் போட்டோகிராப்

ஆட்டோகிராப் வித் போட்டோகிராப்

புகைப்படம் எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் என்று கூறி இந்த அழகிகள், ரசிகைகள் என்ற போர்வையில் வீரர்களை அணுகி வீழ்த்த வாய்ப்பிருப்பதாக இந்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

ஆசிய வீரர்களுக்கே ஆபத்து

ஆசிய வீரர்களுக்கே ஆபத்து

குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற ஆசிய நாடுகளின் அணி வீரர்களைத்தான் இவர்கள் அதிகம் குறி வைக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரசிகைகளிடம் விலகியே இருங்கள்

ரசிகைகளிடம் விலகியே இருங்கள்

எனவே இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ரசிகைகள் யாருடனும் நெருக்கமாக போய் விட வேண்டாம் என்றும் சற்று தூரத்தைக் கடைப்பிடிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோ எடுத்து மிரட்டலாம்

வீடியோ எடுத்து மிரட்டலாம்

ரசிகைகள் என்ற பெயரில் அழகிகளை வீரர்களிடம் அனுப்பி அவர்களுடன் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொள்வார்களாம். பின்னர் அதை சம்பந்தப்பட்ட வீரர்களிடம் காட்டி உங்களுடன் நான் நெருக்கமாக இருப்பது போல செய்தி பரவினால் உங்களது பெயர்தான் கெடும். எனவே நாங்கள் சொல்வது போல விளையாடுங்கள் என்று புக்கிகள் மிரட்டலாம் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

வீரர்களுக்குப் பக்கத்திலேயே ரூம் போட்டு...!

வீரர்களுக்குப் பக்கத்திலேயே ரூம் போட்டு...!

மேலும் தாங்கள் குறி வைக்கும் வீரர்கள் தங்கும் அறைகளுக்கு அருகிலேயே இந்த அழகிகளுக்கும் ரூம் போட்டுத் தங்க வைப்பார்களாம். இதன் மூலம் வீரர்களை வெகு அருகே, தனிமையில் சந்திக்கும்படி செய்ய முடியும். அதை வைத்து பின்னர் வீரர்களை மிரட்டலாம் என்பதும் இந்த சூதாட்டக் கும்பலின் சதித் திட்டமாம்.

அழகிகளுக்குத் தடை

அழகிகளுக்குத் தடை

இந்தப் பிரச்சினையை முன்கூட்டியே தடுப்பதற்கு வசதியாக, புக்கிகளுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல அழகிகள், நியூசிலாந்துக்கு வர ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதாம். மேலும் உலகக் கோப்பைப் போட்டி டிக்கெட்டை வாங்குவோரையும் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கவுள்ளனராம் போலீஸார்.

அழகிகளிடம் சிக்கிய ஸ்ரீசாந்த்

அழகிகளிடம் சிக்கிய ஸ்ரீசாந்த்

அழகிகளை வைத்து வீரர்களைச் சாய்ப்பது கிரிக்கெட்டில் புதிதில்லை. முன்பு 2013 ஐபிஎல் போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த்தையும் இப்படித்தான் பணம், அழகிகளைக் காட்டி மயக்கி காலி செய்தனர். இதேபோல பாகிஸ்தான் உள்ளிட்ட சில அணி வீரர்களும் கூட அழகிகளிடம் மெய் மறந்து ஆட்டத்தில் கோட்டை விட்டுள்ளனர்.

எனவே இந்திய வீரர்களே, மனதை உறுதியாக வைத்துக் கொண்டு கோப்பையில் மட்டும் கவனம் வைத்து விளையாடி விட்டு வாருங்கள்... அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காதீங்க...!

Story first published: Friday, September 12, 2014, 14:42 [IST]
Other articles published on Sep 12, 2014
English summary
With the World Cup coming up at New Zealand at the start of next year, the local police have sounded an alert for the Indian cricketers bewaring them of honey traps during the biggest cricketing extravaganza. New Zealand police chief Sandra Manderson, who is overlooking the security arrangements of the World Cup has revealed that the players need to be beware of females posing as fans for laying trap for match fixing.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X