For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இயன் போத்தம் டுவிட்டர் பக்கத்தில் நிர்வாணப்படம்… நன்றி சொன்ன ஆல்ரவுண்டர்

By Mayura Akilan
Ian Botham's Twitter account hacked
லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தமின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அவரது பக்கத்தில் நிர்வாணப்படம் வெளியாகியிருந்தது. அதைக் கண்டு அவர் அதிர்ந்து போனார் இயன் போத்தம்.

இங்கிலாந்து பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நீண்ட நாளைய சாதனைக்குரியவர் இயன் போத்தம். இப்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் இவரது சாதனையை முறியடிப்பதற்கு மிக அருகில் உள்ளார்.

சுமார் 3,10,000 பேர் இயன் போத்தமின் டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது கண்டு அவர் அதிர்ந்து போனார்.

முன்னாள் வெல்ஷ் அணியின் கால்பந்து வீரர் ராபி சேவேஜ், போத்தம் டுவிட்டர் ஹேக் செய்யப்பட்டதை அவருக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து போத்தம் உடனடியாக தனது பக்கத்தில் டுவீட் செய்ததாவது: நான் எனது பாஸ்வேர்டை மாற்றிவிட்டேன், சில விஷமிகள் இங்கு வருகை தந்துள்ளனர். ஆனாலும் ஹேக்கருக்கு நான் நன்றி கூறுகிறேன்.

இந்தப் புகைப்படத்தினால் 20 நிமிடங்களில் 500 ஹிட்கள் கிடைத்தது. 25 நிமிடங்களில் ஹிட்டை 700ஆக உயர்த்தி விடுங்கள்" என்று நகைச்சுவையாக டுவீட் செய்துள்ளார் இயன் போத்தம்.

பிரபலமானவர்களின் டுவிட்டர் கணக்குகளை சில விஷமிகள் ஹேக் செய்து இதுபோன்று படங்களை வெளியிடுவது அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 19, 2014, 12:10 [IST]
Other articles published on Aug 19, 2014
English summary
Former English cricketer Sir Ian Botham has seen the funny side of a tweet gone viral, thanking the person who tweeted an explicit picture of a penis from his verified BeefyBotham account. The 58-year-old former all-rounder deleted the offending tweet, which he claimed was not his handiwork, but noticed a sharp increase in followers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X