For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நியூசிலாந்திடம் தொடரை இழந்து 'பல்பு' வாங்கினாலும்... அதே 2வது இடத்தில் இந்தியா!

வெல்லிங்டன்: நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை நாம் இழந்தாலும் கூட டெஸ்ட் தர வரிசையில் இந்தியா தொடர்ந்து 2வது இடத்திலேயே இருக்கிறது.

இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்தியா தோல்வியுற்றது. 2வது டெஸ்ட் போட்டியில் வெல்லும் வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தும் கூட பவுலர்கள் பல்பு வாங்கியதால் தோல்வியைத் தழுவ நேரிட்டது.

இருப்பினும் கூட ஐசிசியின் டெஸ்ட் தர வரிசையில் இந்தியா தொடர்ந்து 2வது இடத்திலேயே நீடிக்கிறது.

5 பாயிண்ட் கம்மியாயிருச்சு

5 பாயிண்ட் கம்மியாயிருச்சு

இந்தியா இதுவரை 117 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்தது. தற்போது அதில் 5 புள்ளிகள் குறைந்து 112 புள்ளிகளுடன் அதே 2வது இடத்தில் நீடிக்கிறது.

ஆஸி.யை விட ஒரு புள்ளிதான் ஜாஸ்தி

ஆஸி.யை விட ஒரு புள்ளிதான் ஜாஸ்தி

தற்போது 3வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை விட நாம் ஒரே ஒரு புள்ளிதான் கூடுதலாக வைத்திருக்கிறோம். எனவே சீக்கிரமே ஆஸ்திரேலியா நம்மைத் தாண்டிச் செல்ல வாய்ப்புகள் உள்ளன.

தெ. ஆப்பிரிக்க தொடரை டிரா செய்தால் போச்சு

தெ. ஆப்பிரிக்க தொடரை டிரா செய்தால் போச்சு

ஆஸ்திரேலியா தற்போது தென் ஆப்பிரிக்காவுடன் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. அத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகிக்கிறது. இந்தத் தொடரை வெ்ன்றாலோ அல்லது டிரா செய்தாலோ கூட போதும், அது இந்தியாவை முந்திப் போய் விடும்.

தொடர்ந்து முதலிடத்தில் தென் ஆப்பிரிக்கா

தொடர்ந்து முதலிடத்தில் தென் ஆப்பிரிக்கா

தற்போது இப்பட்டியலில் தென் ஆப்பிரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. இந்தத் தொடரை தென் ஆப்பிரிக்கா போராடி வென்று விட்டால், அது 133 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடரும். அதேசமயம், இந்தியாவும் 2வது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆஸ்திரேலியா 110 புள்ளிகளுடன் 3வது இடத்திலேயே இருக்கும்.

நியூசிலாந்துக்கு உயர்வு

நியூசிலாந்துக்கு உயர்வு

இந்தியாவுடனான தொடரை வென்றுள்ளதால் நியூசிலாந்து அணி 5 புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ளது. தற்போது அதுவும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் தலா 87 புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளன.

யார் யார்...

யார் யார்...

தரவரிசைப் பட்டியல் - 1. தென் ஆப்பிரிக்கா, 2. இந்தியா, 3. ஆஸ்திரேலியா, 4.இங்கிலாந்து, 5. பாகிஸ்தான், 6. இலங்கை, 7. நியூசிலாந்து, 8. மேற்கு இந்தியத் தீவுகள், 9. ஜிம்பாப்வே, 10. வங்கதேசம்.

Story first published: Tuesday, February 18, 2014, 13:36 [IST]
Other articles published on Feb 18, 2014
English summary
India has retained their second position on the ICC Test Team Rankings following the Wellington Test, which ended in a draw to give New Zealand a 1-0 series win, but the series result has made Australia's task of finishing ahead of India on the table before the 1 April cut-off date slightly easier.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X