For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு மகளிர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்குத் தங்கம்: 9 தங்கத்துடன் முன்னேற்றம்

By Mayura Akilan

இன்சியான்: ஆசிய விளையாட்டின், 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில், இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றது.

தென்கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய போட்டிகளில் இந்தியா வென்றுள்ள 9-வது தங்கப் பதக்கமாகும்.

மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பத்தயத்தில் இன்று இந்திய அணியைச் சேர்ந்த பிரியங்கா பவார், மந்தீப் கவுர், டின்டு லேகா, பூவம்மா ராஜூ ஆகியோர் அதிவேகமாக ஓடினர். அதன் பலனாக முதலிடம் பெற்று தங்கத்தைக் கைப்பற்றினர்.

Indian women 4x400m relay team wins gold in Asian Games

சாதனை படைத்த அணி

இன்றைய தினம் 3: 28:68 விநாடிகளில் பந்தைய தூரத்தைக் கடந்து ஆசிய விளையாட்டுப்போட்டியில் சாதனை படைத்துள்ளனர் இந்திய மகளிர் தடகளவீராங்கனையினர்.

2 தங்கம்

இன்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளது. ஆடவர் ஹாக்கி அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.

குத்துச்சண்டையில் வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற 75 கி. குத்துச் சண்டைப் பிரிவில் இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

9 வது இடத்தில் இந்தியா

இதனையடுத்து ஆசியவிளையாட்டுப்போட்டியில் தரவரிசைப்பட்டியலில் 10வது இடத்தில் இருந்த இந்தியா, 9 தங்கம், 9 வெள்ளி 36 வெண்கலம் பதங்கங்களை பெற்று தரவரிசையில் தற்போது 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Story first published: Monday, November 16, 2015, 15:51 [IST]
Other articles published on Nov 16, 2015
English summary
India win GOLD in 4x400m women’s relay with a games record timing
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X