For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7வது ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப்புடன் இன்று மோதல்!

By Mathi

அபுதாபி: 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 3வது போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.

7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர், ஹைதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் என்ற அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

சென்னை- பஞ்சாப் மோதல்

சென்னை- பஞ்சாப் மோதல்

நேற்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தியது. போட்டியின் 3-வது நாளான இன்று அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாபை எதிர்கொள்கிறது.

வெயிட்டான அணி

வெயிட்டான அணி

2 முறை சாம்பியன், 3 முறை இரண்டாவது இடம் என்று ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் கோலாச்சிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். ஆனால் அண்மையில் வெளியான பிக்ஸிங் சர்ச்சைகள் சென்னை அணி வீரர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மைக் ஹஸ்சி, முரளி விஜய் இல்லை..

மைக் ஹஸ்சி, முரளி விஜய் இல்லை..

அத்துடன் சென்னை அணியில் இடம்பெற்றிருந்த மைக் ஹஸ்சியும், முரளிவிஜயும் வேறு அணிக்கு போய்விட்டனர். இந்த சீசனில் சென்னை அணி புதிய தொடக்க ஆட்டக்காரர்களை களம் இறக்க இருக்கிறது.

100வது போட்டி

100வது போட்டி

சென்னை அணி விளையாடப்போகும் 100-வது போட்டி இதுவாகும். பங்கேற்பதில் செஞ்சுரி அடிக்கும் முதல் அணி என்ற பெருமையை சென்னை அணி பெறப்போகிறது. சென்னை வீரர் சுரேஷ் ரெய்னாவும் 100 போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

செம வீரர்களுடன் பஞ்சாப்

செம வீரர்களுடன் பஞ்சாப்

சென்னை அணியை எதிர்த்து இறங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை மதிப்பிட முடியாது. முதலாவது ஐ.பி.எல்.-லுக்கு பிறகு அனைத்து முறையும் முதல் சுற்றோடு வெளியேறிய பஞ்சாப் அணி, சில முன்னணி வீரர்களை ஏலத்தின் மூலம் பெற்றுள்ளது. வீரேந்திர ஷேவாக், ஆஷஸ் ஹீரோ மிட்செல் ஜான்சன் ஆகியோர் முக்கியமான வீரர்கள்.

இதுவரை...

இதுவரை...

இரண்டு அணிகளும் இதுவரை 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 8-ல் சென்னையும், 3-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

Story first published: Friday, April 18, 2014, 9:47 [IST]
Other articles published on Apr 18, 2014
English summary
Distracted to an extent by off-field furores surrounding them, two-time former champions Chennai Super Kings would look to bring the focus back on their cricketing prowess when they take on a revamped Kings XI Punjab in their Indian Premier League opener on Friday
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X